பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராட வேண்டும் Earnestly Contending For The Faith That Was Once Delivered To The Saints 53-06-14A கிறிஸ்தவ நண்பர்களே உங்களுக்கு காலை வணக்கம். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ளம் நிறைந்த கிறிஸ்தவ வாழ்த்துதலைக் கூறுகிறேன். “விசுவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கூடும்” என்று அந்த பாடல் கூறுவதை விசுவாசிக்கிறவர்களாய், அவருடைய சுவிசேஷத்தைப் பிரதிநிதிப்படுத்துகிற விதமாக இந்த சாயங்கால வேளையில் இங்கிருப்பதில் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். “நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும்” என்று இயேசு கூறினார். எப்பொழுதும் போல, நான் வருவதற்கு சற்று காலதாமதமாகிவிட்டது. என்னுடைய திருமணத்தின் போது கூட நான் வருவதற்கு கால தாமதமாகி விட்டிருந்தது. என்னுடைய சவ அடக்கமும் அது போலவே காலதாமதமானால் நன்றாக இருக்கும். பாருங்கள்? அது… என் மனைவி என்னை அதற்காக புரிந்து கொள்வாள். இந்த சாயங்கால வேளையில் அவள் இங்கு இருக்கிறாள். ஆகவே... என் திருமணத்திற்கு, அவளை காத்திருக்கச் செய்து காலதாமதம் செய்தேன். நல்லது. ஆனால், நான் அங்கே மேலே அந்த வாசலை அடைவதற்கு, அந்த ஒரு இடத்தை அடைவதை மாத்திரம் காலதாமதம் செய்ய விரும்பவில்லை. அங்கு நான் சரியான நேரத்திற்கு இருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். எப்படியும், அவர் கிருபையினாலே, அந்த ஒன்றை அடைவதற்கு, நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 1b. நல்லது, நாம்... இங்கிருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது என்பதை மறுபடியும் கூற வாஞ்சிக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக, இந்த ஆராதனைகள் மூலமாக நல்ல தருணத்தை பெற்றிருந்தோம். கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் மரித்துப்போகும் அளவிற்கு நான் பிரசங்கித்துவிட்டேன் என்று யூகிக்கிறேன். ஆனாலும், நாம் பிரமிக்கத்தக்க நேரத்தை கொண்டிருந்தோம். அவர்களின் சிலர்... தூண்களுக்கு இடையேயான நடைபாதை வழியாய், திரளான ஜனங்கள் அணி அணியாய் வருவதையும், பின்னர் குறுக்காக சிறிது சிறிதாக அவர்கள் போவதையும் காணும் போது... ஏதோ ஒன்று அங்கே சம்பவித்துள்ளது. அது அப்படித்தானே? இந்தக் காரியம் எனக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது, ஒரு சமயம் என்னுடைய சகோதரனும், நானும், நாங்கள்.... பள்ளிக்குச் செல்லும் போது எடுத்துச் செல்வதற்காக தாயார் சிறிதளவு மக்காச்சோள பொறியை ஒரு தூக்குவாளியில் போட்டு வைத்தார்கள். மேலும் அது கிறிஸ்மஸ் காலமாக இருந்தது. அந்த சோளத்தைப் பொறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம். நான் சிறுவனாய் இருந்தபோது, அது அரிதான காரியமாக இருந்தது. ஆகவே, பொறித்த சோளத்தை மரத்தைச் சுற்றிலும் போடுவோம். உங்களுக்கு தெரியுமா, பழைய, சிறிய கேதுருமரப் புதருக்குள் போட்டு வைப்போம். ஒரு சமயம் எங்கள் தாயார் அவைகளில் சிறிதளவு மீதம் வைத்திருந்தார்கள். அதை நானும் என்னுடைய சகோதரனும் உண்பதற்கு என்று ஒரு சிறிய வாளியில் போட்டு வைத்திருந்தார்கள். என்னுடைய சகோதரன் சென்று விட்டார். ஆகவே... இரவு உணவுக்கு முன்பு, அந்த வாளியிலிருந்து ஒரு கைப்பிடி நிறைய எடுத்து உண்டால் நன்றாயிருக்குமே என்று எண்ணினேன். ஆகவே, என்னுடைய கையை உயர்த்தி ஆசிரியரிடம் அனுமதி கோரினேன். ஆடை மாற்றும் அறை வழியாக நான் வெளியே சென்றேன். அந்த வாளியை தூக்கினேன். கைநிறைய அள்ளிக்கொண்டேன். அது போதவில்லை என்று மனதில் எண்ணினேன், ஆகவே மறுபடியும் அங்கே சென்று இன்னும் ஒரு கையளவு அள்ளிக்கொண்டேன். நான் வெளியே சென்று, பள்ளிக்கூட கட்டிடத்திற்கு பின்னாக நின்று கொண்டு மக்காச்சோள பொறி அனைத்தையும் தின்றுவிட்டு, திரும்பவும் உள்ளே வந்தேன். சற்று நேரத்திற்குப் பின், இரவு உணவு நேரம் வந்தது, நாங்கள் மலையைக் கடந்து, கீழே மரங்கள் அடர்ந்த சிறிய தோப்புக்குள் அதை உண்பதற்காக வந்து நானும், என்னுடைய சகோதரனும் ஒரு மரக்கட்டை மீது அமர்ந்தோம். அந்த சிறிய வாளியை எங்கள் இருவருக்கும் இடையில் வைத்தோம். அங்கே ஒரு குடுவை இருந்தது, அதற்குள் ஏதோ இருந்தது. அதற்குள் இரண்டு சிறிய கரண்டிகள் இருந்தன. ஆகவே அது வந்தவுடன்... முதலாவது அந்த சோளப் பொறியை நாங்கள் உண்ண வேண்டியதாக இருந்தது. குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆகவே, நான் அதன் மூடியைத் திறந்தபோது அதிலிருந்த சோளப்பொறி கொஞ்சம் குறைய பாதியளவு போய்விட்டிருந்தது. என்னுடைய சகோதரன், “ஏதோ நடந்திருக்கிறது. இல்லையா? சொல்” என்றான். “நிச்சயமாக ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது” என்று நான் கூறினேன். என்ன நடந்துள்ளது என்று எனக்கு தெரியும். ஆகவே அதேபோன்று ஏதோ ஒன்றும் இங்கும் கூட நடந்திருக்கிறது, அவ்வாறு இல்லையா? எல்லாம் சரி. 1c. நல்லது, இப்பொழுது, சற்றுநேரத்திற்கு முன்பு, நான் ஒரு கூட்ட ஜனங்களுடன் வந்து கொண்டிருந்தேன். "என்னே, இந்த மாலை நேரத்தில் நான் இந்த சுவிசேஷ கூட்டத்தில் என்ன பேசப்போகிறேன்?" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். கடற்கரையில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக மதிய வேளையில் ஒரு சிறு கூடுகையை பெற்றிருந்து, சுவிசேஷத்தை பிரசிங்கிக்கவும், களிகூரவும், அவருடைய அழகிலும், அவருடைய வல்லமையிலும் மூழ்கி குளிப்போம். இப்பொழுது... இதற்குப் பிறகு இன்றிரவில் கூட்டம் நிறைவு பெறும். இன்றிரவு ஒரு மகத்தான சுகமளிக்கும் ஆராதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், இரவில் கூட்டம் முடிந்த பிறகு, நம்மில் பலவீனமுள்ள ஒரு மனிதன் கூட இருக்க முடியாது நாம் நம்புகிறோம். இப்பொழுது, விசுவாசமுடைய வர்களாகவும், அதை எதிர்பார்த்தவர்களாகவும் வாருங்கள். அதை விசுவாசிப்பீர்கள் என்றால் சோதித்து அறிகிறவர்களாகாவும் எதிர்பார்ப்புடனும் இருப்போம். தேவன் அதை அருளிச் செய்வார். அது சரியா? வழக்கம் போல, நீங்கள் எதிர்பார்ப்பதைப் பெற்றுக் கொள்வீர்கள். 1d. மேலும் இப்பொழுது, நான்... ஒரு பிரசங்கி என்னும் முறையில், நான் எப்பொழுதும் கூறுவது உங்களுக்கு தெரியும்... நான் ஒரு உதிரி டயர். அதில் ஓட்டை விழும்போது அல்லது துவாரங்கள் விழும் பொழுது, அந்த உதிரி டயரை அதில் பொருத்துகிறீர்கள். சில நேரங்களில், அது மிகவும் நல்லது அல்ல, ஆனால்- ஆனால் இப்பொழுது, நாம் ஓட்டையையோ அல்லது வெடிப்பையோ பெறவில்லை, எனினும் “உதிரியை” பயன்படுத்துகிறோம். இப்போது, நம்முடைய கர்த்தரின் மகிமையான சுவிசேஷத்திலிருந்து சில சுவிசேஷ பகுதிகளை வாசிக்க விரும்புகிறேன். நான் அறிந்ததைக் கூற விரும்புகிறேன். அவைகளைப் பற்றி அதிகமாகத் தெரியாது, ஆனாலும் நான் அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுவிசேஷத்தின் வழி அவ்வாறுதான் உள்ளது என்பதை அறிவீர்கள். நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏதாவது நல்ல காரியம் என்றால் யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். மகத்தான, மிகப்பெரிய இரவு உணவுக்கு நீங்கள் போகும் போது, உங்களின் பக்கத்து வீட்டுக்காரரும் வர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், "என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று கூறுங்கள். தயவாக காரியங்கள் அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். 1e. அப்படிப்பட்ட நாட்கள் தான் இந்த நாள். அதற்குச் சமமான நாட்களில் தான் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இது ஆள்மாறாட்டம் செய்யும் நாள் (பாருங்கள்), அல்லது பொருத்திப்பார்ப்பது என்று அதை அழைக்க விரும்புகிறேன். உங்கள் படிக்கட்டுகளுக்கு சிவப்பு வர்ணம் பூசுங்கள், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கவனித்து பாருங்கள். அவரும் அதே போல சிவப்பு வர்ணம் பூசுவார். பாருங்கள் ? செவர்லட்டுக்குப் பதிலாக ஃபோர்டு வாகனத்தை மாற்றுங்கள், ஃபோர்டு வியாபாரம் பெருகும். அது சரியே. அதேபோலத்தான்... ஒவ்வொருவரும் மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.அது சரியே. அவர்கள் விரும்புகிறார்கள்... நான் வழக்கமாக கூறுவதுண்டு, என்னுடைய கால்சட்டை என்னுடைய மேல் கோட்டுக்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ அல்லது என்னுடைய டை கோட்டுக்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது. என்னுடைய அனுபவம் தேவனுடைய வேதாகமத்துடன் பொருத்தமுடையதாய் இருப்பதையே விரும்புகிறேன். அப்படிப்பட்ட பொருத்த முடையவைகளையே நாம் செய்ய வேண்டும். தேவனுடைய நியமத்துக்கு பொருத்தமுடையதாய் இருக்க வேண்டும். அதன் பின்பு....? எல்லாக் காரியமும் சரியாக இருக்கும். 1f. இப்போது, வேதாகமத்தைத் திறப்பதற்கு முன்பாக... அவருடைய வேதாகமத்தை மூடி கீழே வைத்து விடலாம். மூடி வைத்துள்ள வேதாகமத்தைத் நம்மால் திறக்கக்கூடும்; ஆனால் வேதாகமத்தை நம்மால் திறக்க முடியாது. ஒரே ஒருவர்தான் அதை செய்ய முடியும்; அது கிறிஸ்துவே. வேதாகமமானது, சிங்காசனத்தின் மேல் தேவனுடைய கரங்களில் அந்த விதமாக உள்ளது. அதாவது. அங்கே பரலோகத்தில் ஒரு மனிதனும் இல்லை, பூமியிலும் ஒரு மனிதனும் இல்லை; அல்லது பூமிக்கு கீழும் ஒரு மனிதனும் இல்லை - அந்த வேதாகமத்தை எடுப்பதற்கும், அதை திறப்பதற்கும், அல்லது அதன் பின்பக்கத்தில் முத்திரிக்கப்பட்டுள்ள ஏழு முத்திரைகள் திறப்பதற்கோ ஒருவரும் பாத்திரவானாக காணப்படவில்லை. யோவான் அழத் தொடங்கினான், முப்பர்களில் ஒருவன் வந்து, "அழ வேண்டாம்" என்றான். ஏனென்றால், உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தில் வீற்றிருப்பவருடைய வலது கரத்தில் உள்ள புத்தகத்தை எடுக்க பாத்திரராயிருக்கிறார். [தமிழ் வேதாகமத்தில் வாங்கினார் என்று உள்ளது - மொழிபெயர்ப்பாளர்]. அதைத் திறக்கவும் அதிலிருக்கிற முத்திரைகளை உடைக்கவும், பாத்திரராயிருக்கிறார் என்றான். அந்த தேவ ஆட்டுக்குட்டியானவர், உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்டவர், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் தாமே இந்த பிற்பகல் நேரத்தில் இங்கு வந்து, நமக்குப் புரிந்து கொள்ளுதலை திறந்து கொடுப்பாராக. எழுதப்பட்ட புத்தகத்திலுள்ளவைகளை எடுத்து, அவர் அவைகள் தேவையுள்ள ஜனங்களுக்கு கொடுப்பாராக. 1g. சற்று நேரத்திற்கு முன் என்னுடைய மகன்- அங்கே என்னை சந்தித்தான். என்னை வேறு ஒரு காரில் அமர வைத்து காரை ஓட்டினான், அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, "அப்பா, இன்று பிற்பகல், எதைப்பற்றி (என்ன) பிரசிங்கிக்க போகிறீர்கள்" என்றான். "இப்போது வரைக்கும் எனக்கு தெரியாது" என்றேன். பிரசங்க பீடத்தை அடைவது வரை நான் காத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு அவர் என்ன சொல்கிறாரோ, சரியாக அங்கிருந்து தான் தொடங்குவேன். சில வேளைகளில் ஆதியாகமத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை ஏதாவது தேடிக்கொண்டே செல்வேன். ஆனால் நாய் அதன் பாதையில் செல்வதைப் போல இருக்கும்... எத்தனை பேர் பீகிள் ஜாதி வேட்டை நாயின் பாதையைப் பார்த்திருக்கிறீர்கள்? உங்களை பார்ப்போம்.. ஓ, இங்குள்ள சகோதரர்களே சற்று கவனியுங்கள். பின்பு ஒரு நாயைப் பிடித்து, அதன் பாதையில் செல்லும்படி முயற்சி செய்யுங்கள், அது உடனடியாக கண்டுபிடிக்காது. அது அவ்வாறு போய்க்கொண்டே இருக்கும். சற்று நேரத்திற்கு பின்பு அது நின்றுவிடும். அதன் காதுகள் மேலே எழும்பும், அதன் கண்கள் துரு துரு என புடைக்கும்; அது மோப்பம் பிடித்து விட்டது, பின்னர் அங்கே அது செல்லும். அவ்விதமாகத்தான் அவைகள் அதை செய்ய வேண்டும், அது சரிதானே?. அந்த இடத்தை அடையும் வரை காத்திருங்கள், பின்பு பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆட்கொள்ள அனுமதியுங்கள். அதுதான் வழியாகும். ஓ, அவர் அதிசயமானவர். 1h. மேலும் இப்போது, மகத்தான ஜீவாதிபதியிடத்தில் பேசுகிற வேளையில் சற்று நேரத்திற்கு நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. சர்வ வல்லவரே, எல்லாவற்றிற்கும் போதுமானவராயிருக்கிறவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, நல்ல ஈவுகளை தருகிறவரே, இன்று உம்மை நோக்கி பார்க்கிறோம். உம்முடைய பிரசன்னம் அதிகமாகவும், அளவுக்கதிகமாகவும் எங்களோடு இருந்து உம்முடைய வார்த்தையின் மீது உம்முடைய ஆவியை ஊற்றுவீராக. அது யாருடைய இருதயத்திற்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லத்தக்கதாக, வார்த்தையை அபிஷேகம் பண்ணுவீராக. அது எங்கு செல்ல வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அங்கு செல்வதாக. நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அதைப் பேசுவீராக, கர்த்தாவே, நீர் கூறுவதே நான் பேசுவேன். இப்பொழுதும் பிதாவே, இங்கிருக்கிற ஒவ்வொருவரும், எங்கள் ஜீவியத்தின் நிமித்தம் கணக்கு கொடுக்க வேண்டும். இந்த உலகத்தில் எங்களுக்கு கூறப்பட்டவைகளுடன் நாங்கள் என்ன செய்தோம் என்று கணக்கு கொடுப்பவர்களாகவும் உம்முடைய சமூகத்தில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாகவும் இருக்கிறோம். இப்பொழுதும் கர்த்தாவே, இந்த பிற்பகல் வேளையில் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வார்த்தையை மிகவும் தெளிவாக்கித்தர வேண்டுமாய் ஜெபிக்கிறேன். அந்த நாளில் அங்கு செல்லும்போது, உம்முடைய வார்த்தையின் படி நாங்கள் பதில் கூறும் போது, நீர் எங்களை என்ன செய்ய வேண்டும் என்று கூறினீரோ அதையே செய்தோம் என்று எங்கள் மனசாட்சி நிச்சயமுடையதாய் இருப்பதாக. இப்போதும், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய காரியங்களை எடுத்து அவர்களின் ஒவ்வொரு இருதயத்திற்கும் அளிப்பாராக. அவர்கள் எங்கிருந்தாலும் சரி, எங்கிருக்க போகிறார்களோ, இந்த கூட்டம் முடியும்போது, "அவருடைய பிரசன்னத்தினால், நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா" என்று எம்மாவூரிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவர்கள் கூறினது போல நாமும் சொல்வோமாக; இவைகளை உம்முடைய குமாரனுடைய நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 1. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... யூதா எழுதின நிருபம், வேதாகம புத்தகங்களிலேயே மிகவும் சிறியது. அது கி.பி 66-ல் எழுதப்பட்டது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் 33 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. யூதா எழுதினார் என்று நம்பப்படுகிறது... அவர் தன்னை ஒரு ஊழியக்காரர் என்று அழைக்கிறார், இயேசு கிறிஸ்துவின் (வளர்ப்பு) சகோதரனும் ஆவார். அவருடைய சகோதரர்கள் தொடக்கத்தில் அவரை விசுவாசிக்கவில்லை. ஆனால் சற்று பின்னர் அவர்கள் அவரை விசுவாசித்தனர். யூதா ஒரு தீர்க்கதரிசியாவார். அவருடைய சிறிய நிரூபம், ஊக்குவிக்க கூடிய ஒன்றை சபை அடையாளம் கண்டு கொண்டது... அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். இங்கே நடக்கக் கூடியவைகளைக் கூறி சபையை சீர்படுத்தினார். இந்த நிருபம் எல்லா சபை காலங்களுக்கும் உள்ள எல்லா சபைகளுக்கும் எழுதப்பட்டது. குறிப்பாக இந்த காலத்தில் உள்ள சபைக்கு எழுதப்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். 2. இப்போது சபை என்பது, மறுபடியும் பிறந்த, அழைக்கப்பட்ட ஜனங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் மெத்தடிஸ்டாக, பாப்டிஸ்டுகளாக பிரஸ்பெட்டேரி யன்களாக இப்படி யாராக இருந்தாலும் சரி, அது தேவனால் அழைக்கப்பட்டதாகும். இப்போது, நேரடியாக அவருடைய வார்த்தைக்கு செல்ல விரும்பி, இங்கு இவைகளில் சிலவற்றை வாசித்து, அதைக்குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதையும், அவர் எவ்வாறு நம் இருதயத்துடன் பேசுகிறார் என்பதையும் பார்க்க விரும்புகிறோம். சற்றே... நாளைக்கு துணி துவைப்பது மற்றும் என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளை மறந்து விடுவோமாக. தேவனை ஆராதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காக நாம் இங்கிருக்கிறோம். நானும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வதற்காக இங்கிருக்கிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கும்படிக்கு, இந்த பிற்பகல் நேரத்தில் பரிசுத்த ஆவியானவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த மனிதனாக இருக்கும்படிக்கும், எவ்வாறு ஒரு சிறந்த ஊழியக்காரனாயிருக்க வேண்டும் என்றும், என் மூலமாக உங்களுக்கு கற்றுக் கொடுக்கவும், எவ்வாறு ஒரு சிறந்த கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுத் தருவார். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு சிறந்த சபையாக இருப்போமாக, அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையானது, போதகத்திற்கும், கடிந்து கொள்வதற்குமானதாக இருந்து, ஒரு மனிதனை தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக நிறுத்துகிறது. வரைபடத்தைச் சரியாக நாம் பின்பற்றுவோமானால், நாம் குற்றமற்றவர்களாக நிற்போம் . 3. இப்போது, யூதா எழுதின புத்தகம். அதிலிருந்து சில வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலி களினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (யூதா 1:7) இப்போது, ஒரு பாடப்பொருளாக அதை கூற வேண்டுமென்றால் இது இவ்விதமாக, மூன்றாவது வசனத்தில் கடைசி வாக்கியமாக இருக்கிறது; “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராட வேண்டும்" என்பதாகும். இப்போது, யாருக்கு இந்த நிருபத்தை யூதா எழுதுகிறார் என்று நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். அவிசுவாசிகளுடன் அவர் பேசவில்லை. நேரடியாக கிறிஸ்தவர்களிடமே பேசுகிறார்; இப்போது கவனியுங்கள், "இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபுடைய சகோதரனுமாய், இருக்கிற "யூதா", பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது." பாருங்கள்? 4. இப்போது, அவர் - அவர் சபைக்கு எழுதுகிறார். தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு, அழைக்கப்பட்ட வர்களும் கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுக்கு கூறுகிறார். “இப்போது அப்படிப்பட்ட ஜனங்களாகிய உங்களிடத்திலே பேசுகிறேன். பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்பு கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய் போராட வேண்டும்" என்று அவர் சொன்னார். இப்போது, இல்லை.... ஒப்புக் கொடுக்கப்பட்ட "ஒரு" விசுவாசம் என்று கூறவில்லை; ஒப்புக் கொடுக்கப்பட்ட "அந்த" விசுவாசம்... அங்கே கவனித்தீர்களா? "அந்த - பரிசுத்தவான்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட அந்த விசுவாசம்," சாதாரண விசுவாசம் அல்ல... சில ஜனங்கள் கூறுகிறார்கள், "நல்லது, அது என்னுடைய விசுவாசத்திற்கு முரண்பாடாயிருக்கிறது" என்று. நான்... ஒரே ஒரு விசுவாசம் தான் உண்டு, ஒரே கர்த்தர், ஒரே தேவன், ஒரே ஞானஸ்நானம், ஒரே விசுவாசம், ஒரே உபதேசம். இப்போது, ஜனங்கள், "நல்லது, நான் "ஒரு" விசுவாசத்தை பெற்றுள்ளேன், என்னுடைய சொந்த சபைக்கு செல்வேன்" என்று கூறுகிறார்கள். நல்லது யூதா இங்கே பேசுவது அதுவல்ல. பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட "அந்த" விசுவாசத்திற்காக போராட வேண்டும் என்று கூறுகிறார். 5. இப்போது, நாம் எப்போதும் அறிந்து கொள்ளத் தக்கதான ஒரே வழியானது… நாம் "அந்த " விசுவாசம் என்றால் என்ன என்பதை கண்டுபிடித்து விட்டோமானால், பின்னர் நாம் அந்த விசுவாசத்திற்காக போராட முடியும். அது சரியா? "அந்த" விசுவாசம் என்றால் என்ன?... இப்போது அந்த... பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த விசுவாசம்... இப்போது, நாம் பின்னோக்கிச் சென்று முதன்முதலாக பரிசுத்தவான்கள் என்று எங்கே அழைக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டோமென்றால், அவர்கள் எப்படிப்பட்ட விசுவாசத்தை பெற்றிருந்தார்கள் என்பதை கண்டு கொள்ளலாம், பின்னர் அவர்கள் எதற்காக போராடினார்கள் - நாம் எதற்காக போராட வேண்டும் என்பதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறிந்து கொள்வோம். இப்போது சபை அழைக்கப்பட்டபோது பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அது அவர்கள் பரிசுத்தமாக்கப் பட்ட பின்னரே அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். "பரிசுத்தமாகுதல்" அல்லது "பரிசுத்தவான்" என்ற சொல் "பரிசுத்த மாகுதல்" என்ற சொல்லிலிருந்து வருகிறது. அதன் பொருள் “சுத்தம், தூய, புனிதமான, பரிசுத்தமான, கலப்படமற்ற” என்பதாகும். இவ்வாறு இன்னும் பல பொருள் உண்டு. இப்போது, அதுவே சபையின் தொடக்கம், அது பெந்தெகொஸ்தே தினத்தன்று ஆரம்பிக்கபட்டது. 6. இப்போது, தொடக்கத்தில் அவர்கள் என்ன பெற்றிருந்தார்கள் என்பதை கவனிப்போம், அந்த சபை எதற்காக போராடினது, எதை இழந்து போனார்கள். இப்போது, சபை தொடங்கப்பட்டு, முப்பத்தி மூன்று வருடங்களே ஆயிற்று... இப்போது, பழைய ஏற்பாட்டு காலத்து லேவியரின் நியாயப்பிரமாணத்தை பற்றி யூதா பேசவில்லை என்பது உங்களுக்கு தெரியும் பாருங்கள்? ஏனென்றால் அவர்களும்... இந்த... அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கப்பட்ட முதல் சபையை பற்றி பேசுகிறார். மேலும், இப்போது, அவர்கள் எப்படிப்பட்ட விசுவாசத்தை பெற்றிருந்தார்கள் என்பதை கவனிப்போம் அவர்கள் உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற கிறிஸ்துவின் மேல் விசுவாச முள்ளவர்களாய் இருந்தனர், ஒருவர் மரித்த பின் உயிர்த்தெழுந்து, மரிப்பதற்கு முன்பு எவ்வாறு இருந்தாரோ அதேபோல அவர்கள் மத்தியில் ஜீவிக்கிறவராக இருந்தார் இப்போது, அந்த... பாருங்கள், சில அரசியல் நிகழ்வுகளுக்காக அவர்கள் போராடினார்களா இல்லை. ஆனால் அவர்கள், தங்கள் மத்தியில் இருந்த, உயிர்த்தெழுந்த ஒருவருக்காக, ஒரு– ஒரு ஜீவிக்கிற கிறிஸ்துவுக்காக போராடினார்கள். 7. இப்போது, அவர் உயிர்த்தெழுந்தபோது, அவர் உயிர்த்தெழுந்த பின்னர், அதே கிரியைகளை அப்போஸ்தலர்கள் மூலமாய் நடப்பித்தார், அவர் மரிப்பதற்கு முன்பாக செய்த கிரிகைகளை, அவைகளைக் காட்டிலும் பெரிதான கிரியைகளையும் செய்தார். இப்போது "கொஞ்ச காலம்" என்று அவர் சொன்னார், "உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்களோ என்னை காண்பீர்கள் (சபை, விசுவாசி) உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். "இப்போது, அப்போஸ்தலர்கள் அதைத்தான் விசுவாசித்தார்கள். அவர் மாம்சத்திலிருந்து போனதை காட்டிலும் அதிகமாக, ஆவியிலும் அவ்விதமாக இருந்தார் என்று விசுவாசித்தார்கள். அவர்கள் அவ்வாறுதான் போதிக்கப்பட்டிருந்தார்கள். அதைத்தான் அவர்கள் விசுவாசித்தார்கள். அதைத்தான் அவர்கள் தங்கள் ஜீவியத்தில் கடைபிடித்தார்கள், அதைத்தான் தேவனும் உறுதிப்படுத்தினார். ஆனால் இந்த காலத்தில், இந்த 33 வருட இடைவெளியில், அங்கே அநேக கள்ள சகோதரர்கள் எழும்பி விட்டிருந்தார்கள், விசுவாசத்திற்கு எதிரான கோட்பாடுகளை உள்ளே கொண்டு வந்தனர், இறையியல் சம்பந்தப்பட்ட மக்களை உள்ளே கொண்டு வந்தனர், இதுபோல அநேக வெவ்வேறானவைகளையும் உள்ளே கொண்டு வந்தனர். 8. பவுலை போல, அவரை அங்கே வைக்க நினைக்கிறேன். அவர்கள் வந்து, அவரிடத்தில் சொன்னபோது, அந்த சிறிய யூதன், வளைந்த மூக்கை உடையவர், சிறைச்சாலையில் படுத்து கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறார், அவரின் கணுக்கால்களை சுற்றிலும் சங்கிலி பிணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பலமாக கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் சொன்னார், “நல்லது, சிலர் கிறிஸ்துவை சொந்த ஆதாயத்திற்கென்று பிரசங்கிக்கிறார்கள். மற்றும் சிலர் மற்ற சீஷர்களின் விசுவாசத்தை வேறொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று. அங்கே தான் ஸ்தாபனத்தின் தொடக்கம், பெரிய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அவர் கூறினார், அவருடைய சாட்சிகள் இங்கே இருக்கின்றன, "எவ்வாறு..." என்னுடைய சரீரத்தில் அநேக தழும்புகளை பெற்றிருக்கிறேன், அங்கே எனக்கு வைக்கப்பட்டுள்ளது. கடல் ஆபத்துகளில் இருந்திருக்கிறேன். கள்ளச் சகோதரர்களின் ஆபத்துகளில் இருந்திருக்கிறேன்" என்று கூறினார். இந்த வித்தியாசமான வெவ்வேறு காரியங்களை, அவைகளை அடையாளங்களாக காட்டினார், தேவனுக்கு முன்பாக ஒரு சாட்சியாக, கிறிஸ்து மரித்ததற்காக அவர் அவ்வளவாய் பாடுகளை அனுபவித்தார். 9. தேவனே, அவ்வகையான சாட்சியுடையவர் களாயிருக்க எங்களுக்கு உதவி செய்யும். நாமும் கூட விசுவாசத்திற்காக, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட அந்த உண்மையான விசுவாசத்திற்காக போராடுவோம். பரிசுத்தவான்கள் அவருடைய மரணத்தை, அடக்கம் பண்ணப்பட்டதை, உயிர்த்தெழுந்ததை விசுவாசித்தார்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்கள் விசுவாசித்தார்கள். ஆரம்பகாலச் சபை அதை விசுவாசித்தார்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அதற்காக போராடுங்கள். இப்போது, அடையாளங்களும், அற்புதங்களும் விசுவாசியைப் பின் தொடர்வதை அவர்கள் விசுவாசித்தனர். இப்போது, அவர்களே விழுந்து போய், தூரமாய் போய் விட்டார்கள். அந்த... இப்போது, அவைகளை செய்வதற்காக, பூர்வத்திலே மனிதர்கள் முன்குறிக்கப்பட்டிருந்தார்கள். இப்போது, அது தேவனுடைய இராஜாதிபத்தியமாகும். உண்மையாகவே, அவர் - அவர் அறிவார், "ஒருவரும் கெட்டுப் போவது அவருடைய சித்தமல்ல, ஆனால் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே அவருடைய சித்தம்." ஆனால் அவர் தேவனாக இருப்பதினால், அவர் அறிந்திருக்க வேண்டும், காரியங்கள் நிகழ்வதற்கு முன்பாக யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அது சரியா. 10. ஆகவே விசுவாசமில்லாதவர்கள் அங்கே இருந்தார்கள், அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்று அவர் தொடக்கத்திலேயே அறிந்திருந்தார். அதற்காகவே அவருடைய வல்லமையை காண்பிப்பதற்காக அவர் பார்வோனை எழுப்பி, அவனுடைய இருதயத்தை கடினமுள்ளதாக்கினார். தேவனுடைய தெரிந்து கொள்ளுதலை வெளிப்படுத்த ஏசாவையும், யாக்கோபையும் தெரிந்து கொண்டார். அது அவ்வளவு நிச்சயமுடையதாய் இருக்கிறது. ஒருவரும் பிறக்காதற்கு முன்பே, அவர்கள் பிறந்த போது, அவர்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் " நான் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன்" என்றார். அது சரியா. பிறப்பதற்கு முன்பே... பாருங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று முன் குறித்தார். இப்போது, நீங்கள் அதைப் புறக்கணிக்கலாம். சிலர்... தேவன் உங்களுடைய இடத்தில் வேறு ஒருவரை வைத்து விடுவார், ஆனால் உங்களுடைய ஸ்தானம் அங்கே வைக்கப்பட்டுள்ளது. தேவன் உங்களை அழைத்தாரானால், போய் அதை எடுத்துக் கொள்ளுங்கள், அதிலே தரித்திருங்கள். 11. இப்போது, எவ்வளவு அதிசயமாயிருக்கிறது. பரிசுத்த வான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராடினார்கள், அது எல்லாமும் ஆதியில் இருந்தது... இப்போது, அவர்கள் தொடக்கத்தில் பெற்றிருந்த அதே விசுவாசம், இந்நாட்களில் காணப்பட வேண்டும். கொஞ்ச காலத்திற்கு முன்பாக, ஒரு சிறந்த அறிவாளியுடன் இரவு உணவு உண்டேன், அவருடைய பெயர் இ.ஜோன்ஸ் என்பதாகும். அவர் "சகோதரன் பிரன்ஹாமே" என்றார், மேலும், அவர் சொன்னார், "உங்களுடைய பெரும்பாலான கூட்டங்களில் பெந்தெகொஸ்தே ஜனங்கள் தான் நிரம்பியிருக்கிறார்கள்" என்று. "ஆம் ஐயா" என்று நான் கூறினேன். "ஏன் அவ்வாறு நடக்கிறது?" என்றார் அவர். “விசுவாசிக்கிறவர்கள் அவர்கள் தான்” என்றேன் நான். அதற்கு அவர், "நல்லது" என்றும், "சகோதரன் பிரன்ஹாம், பெந்தெகொஸ்தே என்பது ஒரு சாரக்கட்டு(scaffold) என்று நான் நினைக்கிறேன்" என்றார். மேலும் அவர், "தேவன் ஒரு கட்டிடத்தை தீர்மானிக்க போகிறார்" என்றார்.. அதற்காக அவர்... பெந்தெகொஸ்தே சாரத்தை உருவாக்கினார்" என்றார். “நல்லது” நான் கூறினேன் அது சரி. நான் உங்களுடைய கருத்துடன் உடன்படுகிறேன்" என்றேன். மேலும் அவர், "நல்லது, பாருங்கள், அந்தச் சாரம் அமைத்ததற்கான வேலை முடிந்ததும், ஒருபோதும் அந்தச் சாரம் நமக்குத் தேவையாயிருக்காது," என்றார். அதற்கு நான், "ஆனால் அந்த சாரம் போட்டதற்கான வேலை இன்னும் முடிவடையவில்லை" என்றேன். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன், தேவன் அதை எடுத்து விடுவார், ஆகவே நாம் இன்னமும் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கிறோம்" என்றேன். ஆமென். 12. ஆம், ஐயா, ஏணியின் ஒவ்வொரு படியும் நமக்கு அவசியமாயிருக்கிறது, ஒவ்வொரு படிக்கல்லும் நமக்கு அவசியமாயிருக்கிறது. சரியாக நமக்கு எல்லாமே தேவைப்படுகிறது... கட்டிடம் இன்றும் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது, அது முடிந்தவுடன் எல்லா ஜாதிக்காரருக்கும், எல்லா பாஷைக்காரருக்கும், எல்லா தேசத்தார்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட பிறகே, அது முடிவடையும், பின்னர் இயேசு திரும்ப வருவார். அது சரியா. இப்போது, கணக்கிலடங்கா கைப்பிரதிகள் கொடுப்பதையும், இறையியல் தத்துவங்களையும் உலகம் பூராவும் நடக்கிறது. ஆனால் சுவிசேஷம் ஒட்டுமொத்தமாக முழுமையான வேதாகமம் அல்ல. அந்த- அந்த வேதாகமம்... பவுல் கூறினார், "சுவிசேஷம் வெறும் வார்த்தையாக மட்டும் வரவில்லை, ஆனால் பரிசுத்தாவியானவரின் வல்லமையோடும், செயல்படுத்தும் தன்மையோடும் நம்மிடத்தில் வந்தது " என்று. அங்கே, இயேசு சொல்லும்போது, "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசிங்கியுங்கள்" என்றார். அப்படியானால், உலகம் எங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் தேவனுடைய வல்லமையை செயல்படுத்திக் காட்டுங்கள் என்ற பொருளில்தான் அவர் அவ்வாறு கூறினார். 13. சுவிசேஷத்தை பிரசிங்கிப்பதற்காக, சுவிசேஷப் பிரசங்கமாக அதை நிகழ்த்துவதற்கு முன்பாக, சுவிசேஷத்தை நிரூபிப்பதற்கு பரிசுத்த ஆவியின் வல்லமையும், பரிசுத்த ஆவியின் செயல் விளக்கத்தையும் (demonstration) நீங்கள் பெற்றிருக்க வேன்டியவர்களாய் இருக்கிறீர்கள் "எழுத்து கொல்லுகிறது, வார்த்தையோ... எழுத்துக் கொல்லுகிறது ஆவியோ உயிர்ப்பிக்கிறது." ஆகவே அது வெறுமனே ஒரு பாரம்பரிய பற்று அல்ல; ஆனால், அது முற்றிலும் ஒரு மெய்யானது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஜீவிக்கிற உண்மையாகும். அவர் மனிதர்கள் மத்தியில் ஜீவிக்கிறார். மேலும், அந்த விசுவாசத்திற்காக நான் இன்றைக்கு என்னால் இயன்ற அளவு போராட முயற்சிக்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் அவருடைய வல்லமையை அளவிட முடியாது. 14. தேவனை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவீர் களானால் கிறிஸ்துவையும் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் சபையை அதனால் செய்யக்கூடியவைகளை கட்டுப்படுத்துவீர் களானால், நீங்கள் தேவனை கட்டுப்படுத்துகிறீர்கள் என்று பொருள். "ஆனால் நீங்கள் விரும்புகிற எதுவானாலும், நீங்கள் ஜெபிக்கும் போது அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள், அதை பெற்றுக்கொள்வீர்கள்." அவ்வாறு அவர் கூறியுள்ளார் அதை நான் விசுவாசிக்கிறேன், அது சத்தியம் என்பதை அறிந்திருக்கிறேன். இப்போது தேவன்"இவைகளையெல்லாம் நமக்காகச் செய்தார் என்றும், தீர்க்கதரிசிகள் வேத வார்த்தையின் மூலமாய் இந்த நாளுக்கென்று முன்னுரைத்தவைகளை காணும் போதும், அவைகள் எவ்வளவு அதிசயமானவைகள் என்று நாம் எண்ணுகிறோம். 15. ஒருவர் என்னிடத்தில் கேட்டார், அது அதே மனிதன்தான், நான் ஏன் பெந்தெகொஸ்தே ஜனங்களுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும்? என்று. இப்போது, அதற்கான காரணம் இங்கிருக்கிறது. இப்போது, அநேகக் காரியங்கள் இருக்கிறது, சில கோட்பாடுகளில் அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இது என்னுடைய சொந்த கருத்து, அதையே நானும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணக்கூடும். பாருங்கள் ? இப்போது, ஆனால் இங்கு ஒரு காரியம் இருக்கிறது, ஜீவனுள்ள விசுவாசத்துடன் இருக்கும் ஜனங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனுடன்... ஏதோ ஒன்றை அவர்கள் முற்றிலுமாக பற்றிக் கொண்டிருக்கிறார்கள், தேவன் அங்கிருந்து கொண்டு, அவர்களுக்குப் புதிய பிறப்பை அளித்துக் கொண்டிருக்கிறார். அது தேவனை அந்த மனிதனுக்குள் வைக்கிறது அது அவனை இயற்கைக்கு மேம்பட்டவைகளை நம்பும்படி செய்கிறது. இப்போது, நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லையென்றால், இயற்கைக்கு மேம்பட்டவைகளை உங்களால் விசுவாசிக்க முடியாது. நீங்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசிக்கவில்லை என்றால், நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்றாகிறது. ஏனென்றால், நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது நீங்கள் தேவனுடைய குமாரனாகி விடுகிறீர்கள். மேலும் அவர்... ஒரு தேவனுடைய குமாரனானால், நீங்கள் தேவனுடைய பண்புகளையுடையவர்களாகிறீர்கள். அதன் பின்னர், காரியங்களை கையிலெடுக்கிறீர்கள், தேவனுடைய அசைவைக் காண விரும்புகிறீர்கள். தேவன் அசைவாடுவதை காண்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அவருடைய குமாரனாயிருக்கிறீர்கள், மேலும் அவருடைய சாயலிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள், அவருடைய ஆவியினால் பிறந்துள்ளீர்கள். நீங்கள் அவரில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதன்பின் எதையும் விசுவாசிக்கும் தன்மையுடைய வர்களாககிறீர்கள். ஆமென். 16. ஆரம்பகாலத்திலிருந்தே சாத்தான் எவ்வளவு நெருக்கமுள்ளவனாக இருக்கிறான் என்பதை கவனியுங்கள். இப்போது, "ஓ சகோதரன் பிரன்ஹாமே பொதுவுடமை கொள்கை (communisam) பயங்கரமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?" என்று அநேகர் இந்நாட்களில் கூறுகிறார்கள். ஆம், அது பயங்கரமானது தான். ஆனால் அது அந்திக் கிறிஸ்துவல்ல. இல்லை ஐயா. அந்திக் கிறிஸ்து என்பவன் உண்மையானதற்கு மிக அருகாமையில் இருக்கிறான் என்று இயேசு கூறியிருக்கிறார். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். அது மார்க்க சம்பந்தமான ஜனங்களாயிருப்பார்கள். அங்கிருந்து தான் அது உள்ளே வந்தது. இப்போது, நாம் தொடக்க காலத்திற்கு செல்வோம், மிகவும் பின்னோக்கிச் செல்வோம் − நான் விரும்புகிறேன்... ஏதேன் தோட்டத்திற்கு செல்வோம், அதற்கும் முந்தின காலத்திற்கும் நம்மால் செல்ல இயலும். ஆனால், முதன்முதலாக இந்தப் பூமியில் பிறந்த இரண்டு பிள்ளைகளை எடுத்துக் கொள்வோம். முதற்பிறப்பான காயீன், உண்மையில் பிறப்புரிமையை அவன் தான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஏசாவை போல இழந்து போய் விட்டான். முதலாவது தொடங்கப்பட்ட அந்த தாய் சபையை போல, நீங்கள் விரும்பினால் அவ்வாறு அழைக்கலாம். அவனுடைய வழிகளில் எல்லாம் பிறப்புரிமையை இழந்து போய் விட்டான். 17. இப்போது, காயீன் மற்றும் ஆபேல், அவர்கள் இருவரையும் ஏதேன் தோட்டத்திற்கு வெளியே வைத்தார். ஏனென்றால் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மரணம் நேரிட்டது. அந்த இரண்டு பையன்களும் மிகவும் மார்க்க சம்பந்தமானவர்கள். இப்போது, நாம் எப்படிப்பட்ட நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் காண விரும்பினால், இங்கே எப்படிப்பட்ட பயிர் முளைத்து வரப்போகிறது என்பதைக் காண விரும்பினால், பின்னால் திரும்பிச் சென்று எப்படிப்பட்ட விதையை விதைத்தீர்கள் என்பதைக் கண்டுபிடிங்கள். மேலும் இப்போது ஆதியாகமம் ஒரு வித்தாக இருக்கிறது அல்லது தொடக்கமாக இருக்கிறது. தொடக்கத்தில் எவ்வாறு அங்கே இருந்தது, அங்கே ஆவிகள் அசைவாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். 18. உதாரணமாக, எல்லா வேத வாக்கியங்களினூடாக சென்றால், நம்முடைய நினைவிற்கு பாபிலோன் வருகிறது. பாபிலோன் முதலாவது தொடங்கும் போது, பரிசுத்த வேதாகமத்தின் வழியாக பாருங்கள். பாபிலோன் அங்கே வெகு காலத்திற்கு முன்னரே தோன்றியது. நிம்ரோத் பாபிலோனைக் கட்டினான் என்பது உங்களுக்கு தெரியும். பாபிலோன் முதலாவதாக "பரலோகத்தின் வாசல்" என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது "குழப்பம்" என்று அழைக்கப்பட்டது. அங்கு தான் முதன்முதலாக விக்கிரக ஆராதனை தொடங்கியது. நிம்ரோத் காமின் குமாரனாவார், அது காயினின் குமாரனிலிருந்து வருகிறது. அந்த வித்துக்கள் எங்கிருந்து வந்தது என்பதை கவனியுங்கள். அவர்கள் எப்படிப்பட்ட கனிகளை கொண்டிருந்தனர் என்பதை கவனியுங்கள். எவ்வாறு... அவர்களுடைய நடபடிகள் இருந்தன என்பதைக் கவனியுங்கள், மேலும் இப்பொழுது அதனுடன் நாமும் வானத்திற்கு ஏறிச் செல்வோம். அங்கே... பயிர் வளர்ந்து விட்டது. ஓ, தேவன் நம்மை அதனூடாக ஆழமாக செல்ல வழியை உண்டாக்குகிறார் என்று நான் நம்புகிறேன். ஆகவே ஒரு அஸ்திப்பாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடும். இப்போது, ஏதோ ஒன்று அசைவாடிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். தொடக்கத்தில் அந்த வித்து, இங்கே அது எவ்வளவாய் வளரப்போகிறது என்பதை கவனியுங்கள். உங்களுடைய வித்து எங்கே இருக்கிறது என்று கண்டு கொள்ளுங்கள். இப்போது... அது என்னவாக இருக்கிறது... 19. இப்போது, காயீன் மற்றும் ஆபேல் இருவருமே பக்தி வைராக்கியம் உள்ளவர்கள், அதில் ஒருவன் கிறிஸ்துவுக்கு சாயலாக இருந்தான். மற்றொருவன் அந்திக்கிறிஸ்துவுக்கு சாயலாக இருந்தான். ஆபேல் எவ்வளவு பக்தியுள்ளவனோ அதே அளவு காயினும் பக்தி உள்ளவனாயிருந்தான். ஆமென். அவனைக் கவனியுங்கள். அப்படியானால் நீங்கள் அநேக முறை கவனித்து வந்துள்ளீர்கள், இங்கு கவனியுங்கள், பலிபீடத்தில் காயின் ஆபேலை கொன்றது போல, யூதாஸ் இயேசுவைப் பலிபீடத்தில் கொலை செய்தான், இவ்வாறு காயினும் ஆபேலும் யூதாஸுக்கும் இயேசுவுக்கும் சாயலாக இருந்தார்கள். காலகாலமாக தொடக்கத்திலிருந்தே இவ்வாறு சாதக பாதகங்கள் இருந்து வந்துள்ளன. பேழைக்குள் என்ன இருந்தது என்று பாருங்கள். அங்கே ஒரு புறாவும் ஒரு காகமும் இருந்தது. இரண்டுமே ஒரே பேழைக்குள்ளேதான் இருந்தன, அதே தங்குமிடம். அவைகளின் ஒன்று மேலே செல்ல விருப்பமாயிருந்தது... இரண்டுமே பறக்க கூடியவைகள் தான். இரண்டுமே பறவை இனத்தைச் சேர்ந்தவைகள். கவனித்தீர்களேயானால், அவைகள் உட்கொள்ளுகிற உணவில் இருக்கிறது. 20. அவைகளை பறக்க விட்டபோது, காகமானது மரித்துப்போன மாமிசக் குவியிலிருந்து மற்றொரு மரித்த மாமிசக் குவியலுக்கு தாவித்தாவி சென்று மாமிசத்தை உண்டு திருப்தியடைந்தது. ஆனால் புறாவுக்கோ கால் மிதித்து ஓய்வு எடுக்க இடமில்லை. அவள்... ஒரு புறவானது பித்தப்பைகளைக் கொண்டதல்ல, ஆகவே அப்படிப்பட்ட மாமிசத்தை புறாவால் ஜீரணிக்க முடியாது. சபைக்கு அது எவ்வளவாய் ஒரு சாயலாயிருக்கிறது... ஒரு மனிதன் "நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் நான் விரும்புகிற எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்று கூறினார். சகோதரரே மற்றவருக்கு இது எதையோ காண்பிக்கிறது... மனிதன் அவன் கிரியைகளினால் அறியப்படுகிறான்; உன்னுடைய கனிகளே நீ எப்படிப்பட்ட மனிதன் என்று சாட்சி கொடுக்கிறது. இந்த பழைய வயதான காகம் ஒரு சரீரத்திலிருந்து மற்றொரு சரீரத்திற்கு போகக்கூடும், அழுகிய மாமிசத்தைப் புசிக்கும், திருப்தியடையும், ஆனால் புறாவுக்கோ கால்மிதிக்க இடமில்லை. அது வீட்டிற்குத் திரும்பவும் வந்தது. 21. தேவனால் பிறந்த ஒவ்வொரு மனிதனும், பின்வாங்கி போகலாம் அல்லது விசுவாசத்திலிருந்து விழுந்து போகலாம், ஆனால் நீ தேவனால் பிறந்திருப்பாயானால் நீ பேழைக்குள் வந்துவிடுவாய், உலகில் உள்ள எதையும் விட அவ்வளவு நிச்சயமாக. ஜீவனுள்ள தேவனுடைய சபையானது பேழைக்குள் வந்தே ஆக வேண்டும். நீ எவ்வித பித்தப்பையும் உடையவனல்ல. அவர் உன்னைப் பரிசுத்தப்படுத்தும் போது, அவைகள் அனைத்தையும் உன்னை விட்டு வெளியே எடுத்து விடுகிறார். இயேசு கிறிஸ்துவுக்குள் உன்னை புது சிருஷ்டியாக்கி விடுகிறார் . குதிரைகளை கவனித்துப் பாருங்கள். சாம்பல்நிறம், பழுப்புநிறம் கொண்ட குதிரைகள் உள்ளன. தொடக்கத்தி லிருந்தே, இயேசுவும் யூதாஸும் அருகருகே இருந்துள்ளனர். இயேசு காட்சியில் வந்த போது, யூதாஸும் காட்சியில் வந்தான். அவர்கள் இருவரும் ஒரே சபையில் சகோதரர்களாகயிருந்தனர்; ஒருவர் மேய்ப்பனாக இருந்தார்; மற்றொருவன் பொக்கிஷதாரியாக இருந்தான். கவனியுங்கள், சில ஜனங்கள் கொல்கதாவில் மூன்று சிலுவைகளை மட்டுமே பார்க்கிறார்கள். அங்கே நான்கு சிலுவைகள் இருந்தன. அங்கே ஒரு கள்ளன் ஒருபக்கத்திலும் மறுபக்கத்தில் ஒரு கள்ளனும், இயேசு அவைகள் இரண்டிற்கும் மத்தியில் இருந்தார். "மரத்தில் தொங்குகிறவன் சபிக்கப்பட்டவன்". அவ்விதமாக மரத்தில் தொங்கி நமக்காக சபிக்கப்பட்டவரானார். யூதாசும் ஒரு அத்தி மரத்தில் தொங்கினான், மற்றவர்களுக்கு சிலுவை எவ்வாறு இருந்ததோ அதேபோல. 22. இப்போது இங்கு கவனியுங்கள். இங்கே தேவனுடைய குமாரன் இருக்கிறார், அவர் தேவனுடைய தந்த மாளிகைகளிலிருந்து இறங்கி வந்து மாமிசமாகி நம் மத்தியில் வாசமாயிருந்தார். இங்கே யூதாஸ் இருக்கிறான், கேட்டின் மகன், பாதாளத்தில் இருந்து வந்தான், பாதாளத்திற்கே திரும்பி விட்டான். இங்கே மாமிசத்திலிருக்கிற தேவன் பரலோத்திலிருந்து வந்தார், பரலோகத்திற்கே திரும்பச் சென்றுவிட்டார். அங்கே, ஒரு பக்கத்திலிருந்த திருடன், “கர்த்தாவே நீர் உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் வரும் போது என்னை நினைவு கூறும்” என்று கூறினான். மற்றொருவனோ, "இருந்தால்" என்று ஒரு கேள்விக் குறியைப் போடுகிறான், தேவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டாரா, இல்லையா என்பது தெரியவில்லை, " நீர் தேவனுடைய குமாரனேயானால், எங்களை இரட்சியும்" என்றான். அவன் சுவிசேஷப் பிரசங்கி, அவிசுவாசிகளுக்குப் பிரசிங்கிக்கிறான். அல்லேலூயா. அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். 23. இயேசு திரும்பவும் வந்தார், மனந்திரும்பிய சபையை, மறுபடியும் பிறந்த சபையை அவருடன் கொண்டு செல்வதற்காக, பிசாசும் அவனுடைய கூட்டத்தாருடன் பாதாளத்திற்கே திரும்பி சென்றான்; " நீா் ஒரு தெய்வீக சுகமளிப்பவரானால், இதைச் செய்யும். நீர் அதுவாக இருந்தால்... "இது சரியாக இருந்தால்... இருந்தால், இருந்தால், சாத்தான் எப்போதுமே தேவனுடைய வார்த்தையைக் குறித்து ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டே இருப்பான்; "நீர் அவராக இருந்தால்..." "ஏன், அவர் ஒரு தெய்வீக சுகமளிப்பவராக இருந்தால், இந்த ஒருவரை சுகமாகட்டும், இந்த ஒருவரை சுகமாக்கட்டும். அவராக இருந்தால், அவர் இதுவாக இருக்கட்டும்". அது எப்பொழுதுமே இருந்தால்... என்பதாக இருக்கிறது. அதனுடன் ஒரு கேள்விக்குறி வைப்பது. ஆனால் ஒரு உண்மையான விசுவாசியோ தேவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் சத்தியம் என்று விசுவாசிப்பான் வார்த்தை கூறினபடியே ஏற்றுக் கொள்வான். அங்கே தான் நீங்களும் இருக்கிறீர்கள். 24. கவனியுங்கள், நாம் மறுபடியும் காயினுக்கு திரும்புவோம். மேலும், ஆதியில் இருந்த விசுவாசத்தின் சில காரியங்களைக் குறித்து பார்ப்போம். அந்த ஆவிகளை கவனித்து பாருங்கள், அது எவ்வாறு அசைய தொடங்கிற்று என்று. எதைச் செய்தாலும், எப்படியும் அந்த ஆவி தான் கிரியை செய்கிறது. கடைசி நாட்களை கொண்டுவரும்படியாக ஜனங்கள் இப்படிப்பட்ட ஆவியில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஜனங்கள் கடைசி கால ஆவியை உடையவர்களாய் இருக்கிறார்கள். தேசங்கள் கடைசி கால ஆவியை உடையதாய் இருக்கின்றன. எல்லாவிதமான அணு ஆயுதங்களையும், ஹைட்ரஜன் ஆயுதங்களையும் உடையவர்களாய் இருக்கின்றனர், ஏனென்றால் அது இந்த நாளுக்குரிய ஆவி. ஜனங்கள் கடைசிக் கால ஆவிக்குள்ளாக இருக்கின்றனா். சபை பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் அதன் தாக்கத்திலும் அசைந்து கொண்டிருக்கிறது. உலகமோ அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது, கேலி செய்தும், பரிகாசம் செய்தும் நகைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் பிசாசு போலவே வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். அது அந்த ஆவியின் கிரியையாயிருக்கிறது. 25. தேவன் அவருடையவர்களைச் எடுத்துக் கொள்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். பிசாசும் அவனுடையதை எடுத்துக்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். அல்லேலூயா. தேவனுடைய வார்த்தையில் சபைக்கு முன்பாக "இருந்தால்"என்பதே கிடையாது. அவர்கள், "இது கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுகிறார்கள். நாம் அதை விசுவாசிக்கிறோம். உலகம் என்ன கூற விரும்புகிறதோ அதை கூறட்டும். அவர்கள் எப்பொழுதும் பரிகாசம் செய்தும், நகையாடியும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே ஆதியிலிருந்தே வந்திருக்கிறார்கள்.சில சமயங்களில் சத்தியத்தை அறியாதவர்களாக எவ்வளவு அடிப்படையான அளவில் நாம் இருக்கிறோம் என்பதை கவனியுங்கள். இப்போது கவனியுங்கள் தொடக்கத்தில் அங்கே, காயீனும் ஆபேலும் தோட்டத்தை விட்டு வெளியே வந்த போது, துரத்தப்பட்டபோது, ஏனென்றால் அங்கே பாவம் இருந்தது. மரணம் அவர்களை தேவனிடமிருந்து பிரித்துவிட்டிருந்தது. ஒரு கேரூபினை அங்கே வைத்தார், ஜீவ விருட்சத்தைப் பாதுகாக்கும் படி தோட்டத்தை சுற்றிலுமாய் சுடரொளி பட்டயத்துடன் தூதனையும் வைத்தார். 26. இப்போது, சாவுக்கேதுவான மரமும் அங்கேயிருந்தது. அது என்னவாக இருக்கும் என்று எனக்கென்று சொந்தக் கருத்தை கொண்டவனாக இருக்கிறேன். உங்களுக்கென்று கருத்துடைய வர்களாய் இருக்கக்கூடும். எப்பொழுதெல்லாம் அந்த விருட்சத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் மரிக்கப் போகிறார்கள். ஆனால் இந்த ஜீவ விருட்சத்தை எடுத்துக் கொள்வார்களானால் அவர்கள் ஜீவிக்கப் போகிறார்கள். ஆகவே சாவுக்கேதுவான விருட்சத்தை அவர்கள் எடுத்துக் கொண்ட போது அது அவர்களை தேவனை விட்டு பிரித்து விட்டது. மேலும் ஜீவ விருட்சத்தை அவர்கள் தொடக்கூடாத அளவிற்கு அதைச் சுற்றிலுமாய் ஒரு தூதனை வைத்தார். ஏனென்றால் ஜீவ விருட்சத்தை அவர்கள் எடுத்து கொள்ளும் அதே நேரத்தில், அவர்கள் நித்திய நித்தியமாய் ஜீவிப்பார்கள், நல்லது கெட்டது என்பதை அறிந்து கொண்டவர் களாயிருப்பார்கள். அது சரியா? எல்லாம் சரி. பின்பு கவனியுங்கள் அந்த விருட்சம் ஒரு ஸ்திரியாக இருந்தது, அப்போது அவர்கள்... ஆதாம் அதில் பங்கு பெற்றபோது, அது அவனை பிரித்து விட்டது... ஸ்திரியானவளே, உலகத்திற்கு ஜீவனைக் கொண்டு வருகிறாள்; அது மீண்டும் மரிக்க வேண்டும். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த அந்த ஜீவ விருட்சம். இயேசு கிறிஸ்துவாகும். அவர் கீழே இறங்கி யூதர்களுடைய பண்டிகைக்கு வந்த போது, அவர்கள்," எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்"... என்றார்கள். அதற்கு அவர், "அவர்கள் அனைவரும் மரித்து விட்டார்கள். ஆனால் நானோ பரலோகத்திலிருந்து வந்த ஜீவப்பம். அதைப்புசிக்கிற மனிதன், அவன் ஒருபோதும் மரிப்பதில்லை" என்றார். அவரே அந்த ஏதேன் தோட்டத்தில் மத்தியிலிருந்த ஜீவ விருட்சம். 27. நாம் ஸ்திரியின் மூலமாக பிறந்தது எவ்வளவு நிச்சயமோ, காலமெல்லாம் கவலையுடையவர்களாகயிருக் கிறோம். கொஞ்ச நாட்களில், மரித்து விடுகிறோம். ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும், நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான், கடைசி நாட்களில் எழுப்பப்படுவான். ஆனால், அது ஆள் மாறாட்டமாக இருக்கக் கூடாது; அது நேர்மையான பரிசுத்தாவியாயிருக்க வேண்டும். அது மறுபிறப்பு அடைந்திருக்க வேண்டும், அது அவனை புது சிருஷ்டியாக்குகிறது. அவன் பாவனை விசுவாசமாகவோ அல்லது இறையியல் சம்பந்தப்பட்டதாகவோ இருக்காது. அது முற்றிலுமாக இயற்கைக்கு மேம்பட்ட ஒரு பிறப்பாக இருக்கிறது. இயற்கையில் முதலாவது பிறக்கும்போது அங்கே வலிகளும், தவிப்புகளும் ஏற்படுவது போலவே, மறுபடியும் பிறத்தல் என்பதிலும் அதேபோன்ற வேதனைகளும், தவிப்பும் உண்டாகி ஒரு மனிதனை இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக்குகிறது. அல்லேலூயா. ஓ, உற்சாகமடைய வேண்டாம். நான் அடையவில்லை... நான் ஒருவரையும் இதுவரை புண்படுத்தவில்லை. 28. கவனியுங்கள், ஆனால் இங்கே காயீன் மற்றும் ஆபேல் இவர்களை நான் பார்க்கும் போது... அவர்கள் அழிவுக்குரியவர்கள் என்பதை கண்டார்கள்... அவர்கள் ஒரு வழியை பெற்றிருக்க வேண்டியவர்களாயிருந்தார்கள். தேவனிடத்திலிருந்து தயவு பெற வேண்டும் என்ற ரீதியில் இருந்தனர். ஆகவே வெளியே சென்று... வித்தியாசமான கனிகளை வயல்வெளியில் சேகரித்தனர், இன்னும் பலவாக... பலியைச் செலுத்தி தேவனுடைய கோபத்தை தணிக்க முயற்சி செய்தனர். அவர்கள் மீது தேவனுடைய நியாய தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காயீன் கடினமாக உழைத்தான். அதில் சந்தேகமேயில்லை. நல்ல கனிதரும் மரங்களை வளர்த்தான். இப்போது, கவனியுங்கள். எல்லாவற்றிலும் ஆபேல் எவ்வாறு இருந்தானோ, அது போலவே காயினும் தீவிர மதவாதியாக இருந்தான். ஒரு நேர்மையான மனிதன் போலவே சரியாக இருந்தான். இப்போது நற்கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் அவருடைய இரக்கத்தினாலே இரட்சிக்கப்பட்டோம். 29. அதன் பின்னர் ஆராதிப்பதற்காக அவர்கள் இருவரும் தேவனுக்கு முன்பாக வந்தனர். அது வாசலுக்கு கிழக்கு பக்கத்தில் நடந்தது என்று விசுவாசிக்கிறேன். அவர்கள் இருவரும் மிகச் சரியாக அவருடைய பிரசனத்திற்கு முன்பாக வந்தனர் என்று விசுவாசிக்கிறேன். கிழக்குப்பக்க வாசலைச் சுற்றிலுந்தான சுடரொளி்ப் பட்டயம் சுற்றிக் கொண்டிருந்தது, இவ்விதமாக, ஜீவ விருட்சத்தை காவல் காத்தன. பாருங்கள், அது இங்கே இருக்கிறது. நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என நான் நம்புகிறேன். ஸ்திரியினிடத்தில் மனிதன் பிறப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் அவன் மரிக்கவே மரிக்க வேண்டும். அது எவ்வளவு நிச்சயமோ, அவன் கிறிஸ்துவினால் பிறந்திருந்தால், அவன் ஜீவித்தே ஆக வேண்டும். அவன் ஜீவித்தே ஆக வேண்டும். அதற்கு அவன் எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. அவன் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறான். அவன் அதை பெற்றுள்ளான் என்று கிறிஸ்து கூறியுள்ளார். 30. இப்போது அந்த நாளிலே அந்த ஜீவ விருட்சத்தை அவர்கள் அடைந்து விடாதபடிக்கு தேவன் காவல் வைத்தார். ஆனால் இப்போது, அந்த பட்டயம் முதலில் இருந்த நிலையிலிருந்து, இப்போது வேறு ஒரு பாதையில் ஜீவ விருட்சத்திற்கு போகும் பாதையில் சுழன்று கொண்டிருக்கிறது, ஆகவே அவர்கள் ஜீவனை அடைகிறார்கள். ஜனங்கள் அங்கு வழிநடத்தப் படுகின்றனர்,ஜீவ விருட்சத்தினிடத்திற்கு மந்தையை மடக்குகின்றனர். எவ்வளவு அதிசயம். இதை கவனியுங்கள், அங்கே நான் கவனித்தேன். காயீன் அங்கே வந்தான், கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தை கட்டினான்; இருவருமே அதை செய்தனர். இப்போது, பலிபீடம் மட்டுமே தேவனுக்கு தேவையாயிருந்தால் அல்லது சபை உறுப்பினராயிருப்பது, ஆபேல் எவ்வளவு நீதிமானோ அந்த அளவிற்கு காயீனும் நீதிமானாயிருந்தான். காயீன் ஒரு பலிபீடத்தை கட்டினான், ஆபேல் என்ன செய்து முடித்தானோ, அந்த அளவிற்கு காயீனும் நல்ல நோக்கமுடையவனாக இருந்தான். நல்லது "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய நோக்கம் நல்லதாய் இருக்கு மட்டும்" என்று நீங்கள் கூறலாம், இல்லை ஐயா. அது கிரியை செய்யாது. “நல்லது, நான் நல்ல நோக்கத்தோடு சபையில் சேர்ந்தேன்", அதுவும் கிரியை செய்யாது. காயீனும் அதையே செய்தான். 31. காயீன் ஒரு நாத்திகன் அல்ல என நினைவில் கொள்ளுங்கள். காயின் ஒரு விசுவாசி. இது உங்களிலிருக்கும் இரப்பையை உலுக்கும். உங்களில் சிலர் அடிப்படைவாதிகள் என்று நான் நம்புகிறேன், அப்படிப்பட்ட ஒரு இருதயத்தை உங்களுக்குள் வைக்கும்.(அது சரி) ஒரு விசுவாசிக்கிற இருதயம். கவனியுங்கள், காயின் ஒரு மதவாதியும் ஒரு விசுவாசியும் ஆவான். அவன் வந்து ஆபேல் எப்படிப்பட்ட விசுவாசத்தோடு பலிபீடம் கட்டினானோ, அதே விசுவாசத்தோடு காயீனும் பலிபீடத்தைக் கட்டினான்". “ஆனால் மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு…” இப்போது, நீங்கள் புரிந்து கொள்வீர்கள், சற்று நேரத்திற்குப் பிறகு, ஏன் நான் ஒரு பரிசுத்த உருளையாக இருக்கிறேன் என்று. இப்போது கவனியுங்கள் அவன் வந்து உத்தமமான இருதயத்தோடு கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் வெளியே புறப்பட்டு போய் சிறந்த கனிகளை சேர்த்து, அவைகளை பலிபீடத்தில் வைத்தான். ஒருவேளை பலிபீடத்தை அழகிய மலர்களால் அலங்கரித்திருக்கக் கூடும் கொஞ்ச நேரத்தில் அதை என்னால் நிரூபிக்க முடியும், அதிக நேரம் பிடிக்காது, ஆனால் ஒரு நிமிஷ நேரத்தில். ஆனால் அழகு என்பது முற்றிலும் வஞ்சகம் நிறைந்ததாக இருக்கும். 32. மிகாவேல் தூதனைக் காட்டிலும் மிக அழகிய இராஜ்ஜியத்தை கொண்டிருக்க வேண்டும் என்னும் எண்ணமுடைய வனாக சாத்தான் இருந்தான். அவன் வடதிசைக்கு சென்று அவனுடைய இராஜ்யத்தைச் ஸ்தாபித்துக் கொண்டான். அது அவனுடைய தன்மையாக இருந்தது. இங்கே அவனுடைய சொந்தப்பிள்ளை, அதே தன்மைகளை உடையவனாக இருந்தான். காயீன், அங்கு தான் இருந்தான். அவன் அங்கே சென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் வெளியே சென்று, சமீபத்தில் சபிக்கப்பட்ட அந்த நிலத்திலிருந்து பெரிய பெரிய வண்ணம் நிறைந்த லில்லி புஷ்பங்களை சேகரித்தான். அவைகளைக் கொண்டு பலிபீடம் முழுவதும் அலங்கரித்தான். அவைகள் இந்நாட்களிலிருக்கும் நவீன மயமாக்கப்பட்ட சபைகளில் ஒன்றைப் போல , நல்லது போல உங்கள் சிந்தையில் வைக்கப்படும். உயிர்த்தெழுதலின் பண்டிகையின் போது, ஒவ்வொருவரும் சபைக்கு வருகிறார்கள், அவர்கள் சிறிதளவு ஈஸ்டர் மலர்களை வாங்குகிறார்கள். அவைகளைப் பலிபீடத்தில் வைக்கிறார்கள், எல்லோரும் அவ்வாறு செய்கின்றனர். தேவன் ஈஸ்டர் மலர்களை பலிபீடத்தில் வைப்பதை விரும்பவில்லை; உன்னையே நீ பலிபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதைத்தான் தேவன் விரும்புகிறார். பலிபீடம் மனிதனுக்காக உருவாக்கப் பட்டது, அது மலர்களுக்காக உருவாக்கப்படவில்லை. 33. ஆனால் இந்நாட்களில் நடக்கிற காரியம் என்ன, சபையை விட்டு பலிபீடத்தை எடுத்து போட்டு விட்டீர்கள். அதை கீழ் அறையில் கொண்டு போய் போட்டு விட்டீர்கள். பலிபீடத்தில் நீங்கள் பெற்றுக் கொண்ட அந்த அனல்- நீங்கிவிட்டது, அது கீழ் அறையில் இருக்கிறது. அல்லேலூயா. பழங்காலத்து மேலறை அனுபவமே நமக்கு தேவையாயிருக்கிறது, அங்கே தேவன் பரிசுத்த ஆவியின் வல்லமையும் அக்கினியையும் ஊற்றுகிறார். தொடக்கத்தில் அவா் செய்தது போலவே. ஆனால் இன்று நாம் பெற்றுள்ளது என்ன, இருப்பு உலைக்களத்தையே அவ்வளவாய் பெந்தெகொஸ்தே மோசம் அடைந்துள்ளது. இப்போது அதுதான் உண்மையாகும். இப்போது, நான் கவனித்தேன். தேவன் இங்கே என்ன செய்தார். காயீன் மேலே வந்தான். அவனுடைய காணிக்கையை அவன் செலுத்தினான். இப்போது, ஒரு சபையில் உறுப்பினர் என்பது மாத்திரம் தேவனுக்கு போதுமானதாயிருந்தால், காயீன் அதைப் பெற்றிருந்தான், தேவனுக்கு உத்தமம் தேவையாயிருந்தால் காயினிடத்தில் அந்த உத்தமம் இருந்தது தேவனுக்கு ஒரு பலி செலுத்தப்பட வேண்டும் என்பது தேவையாயிருந்ததால், காயின் அதை செய்தான். 34. அது அப்படியானால், அதன் பிறகு, அவன் பலி பொருளை உடையவனாயிருந்தான், பலிபீடத்தைத் கொண்டிருந்தான், அவனுக்கு சபை இருந்தது, எல்லாமும் ஆயத்தமாயிருந்தது, அழகாகவும் இருந்தது, ஒருவேளை ஆபேலின் பலிபீடத்தை் காட்டிலும் மிகவும் அழகுள்ளதாயிருந்திருக்கலாம்... ஆனால், தேவன் கைகளினால் உருவாக்கப்பட்ட அழகில் வாசம் பண்ணுகிறது இல்லை. பரிசுத்த அலங்காரத்தில் தான் தேவன் வாசமாயிருக்கிறார், அங்கே தான் பரிசுத்தாவியின் வல்லமை இருக்கிறது... ஆம் . அதன் பின்னர் என்ன ஆயிற்று? கவனியுங்கள். அவனுடைய பலிபீடத்தை உருவாக்கின பிறகு, தன்னுடைய பலியைச் செலுத்தினான், சபையில் சேர்ந்தான், அவனுடைய இருதயம் உத்தமமாயிருந்தது... இன்று நாம் அவனை அழைப்போமானால், "அவன் மிகவும் நல்லவனாக இருந்தான். அவன் பகட்டான அடிப்படைவாதியாக இருந்தான். எல்லாம் சரி. அங்கே அவன் வருகிறான், பின்பு முழங்கால் படியிடுகிறான். இதைக் குறித்து திடீரென்று நான் பேசக் காரணம் என்னவெனில் நானும் அதைப் போன்றே காணப்பட்டேன். பாருங்கள்? இப்போது கவனியுங்கள்... நான் இன்னமும் அடிப்படை வாதியாகவே இருக்கிறேன். ஆனால் இன்னும் சில காரியங்கள் உள்ளன. ஒரு வயதான கருப்பு மனிதன் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு சொல்வது போல ,"அது நன்றாக இருந்தது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவது போல "அது சரியா. 35. கவனியுங்கள். அவன் முழங்காற்படியிட்டுத் தேவனை துதித்தான். அவனுக்கென்று ஒரு சபை இருந்தது, அதில் அவன் ஒரு உறுப்பினராக இருந்தான். அவனுக்கு ஒரு பலிபீடம் இருந்தது, பலியும் செலுத்தினான் அவன் தேவனை துதித்தான்.தேவனுக்கு நீங்கள் சபைக்கு செல்ல வேண்டும் ,ஒரு விசுவாசியாயிருக்க வேண்டும், புத்தகத்தில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு வருஷமும் சந்தா செலுத்த வேண்டும், தேவனைத் துதிக்க வேண்டும், இவைகள் மட்டும் தேவனுக்குத் தேவைப்படுமானால், ஆபேல் எவ்வளவு நீதிமானாகச் சரியாக இருந்தானோ, அவ்வளவுக்கு நீதிமானாகவும், சரியானவனாகவும் காயினும் இருந்தான், ஆகவே அது சரியா காயீனை கடிந்து கொண்டதற்காக தேவன் குற்றமுள்ளவராய் இருந்திருக்க வேண்டும். அது சரியா. ஆனால் கவனியுங்கள். ஓ,அவன் காரியங்களை நேர்த்தியாய், அழகாய் செய்திருந்தான். அவன் மகத்தான, ஒரு பெரிய, சிறந்த ஸ்தலத்தை கட்டினான். அங்கு பொருத்த வேண்டியதை சரியாகப் பொருத்தினான் என்று நான் நினைக்கிறேன், ஏதேன் தோட்டத்தில் பறித்துப் புசித்தது ஆப்பிள் பழங்ககளே அதனால் தான் அவன் ஏதேன் தோட்டத்தைத் விட்டு துரத்தப்பட்டான் என்று போதுமான அளவுக்கு அறியாமையுள்ளவனாக விசுவாசித்தான். நான் கூறினேன்... நான் இதைக் கூறுகிறேன், மோசமாக குறிப்பிட வேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால், ஆப்பிள் பழங்களை புசித்ததினால் அந்த ஸ்திரியை தாங்கள் நிர்வாணிகளாகியிருக்கிறோம் என்று உணரச் செய்யுமானால், மறுபடியும் ஆப்பிள் பழங்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இதுதான். அதுதான் மிகவும சரியானது. ஆம், ஐயா. அது ஒரு போதும் ஆப்பிள் பழங்களாக இல்லை, வேறு எதுவாகவும் இல்லை. 36. கவனியுங்கள். ஆனால் அங்கே ஆபேல் வருகிறான். (அல்லேலூயா.), கிரியைகள் எதுவும் செய்யவில்லை, ஆனால் கிருபையினாலே அழைக்கப்பட்டதினாலும், தெரிந்து கொள்ளப்பட்டதினாலும் மந்தையிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆட்டுக்குட்டியுடன் இங்கு வருகிறான். அதன் கழுத்தைத் திராட்சைச் கொடியினால் சுற்றிக் கட்டியிருக்கிறான், அதைக் கட்டி இழுத்து கொண்டே வந்தான். "அந்தக் கொடி அவனிடத்திலிருந்ததா... அதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?"என்று கேட்கலாம். நல்லது அவர்களிடத்தில் சணல் நூல் எதுவும் இல்லை, ஆகவே அது திராட்சைக் கொடியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "அதை அவர்கள் மேலே வழிநடத்தினார்களா? "ஆம், ஐயா. ஏனென்றால், அது கிறிஸ்துவுக்கு ஒரு சாயலாக இருக்கிறது. அவர்கள் அவரை கல்வாரிக்கு அழைத்துச் சென்றனர். ஆபேல் இங்கு வருகிறான், அது ஆப்பிள் பழங்களோ அல்லது வேறு வகையான பழங்களோ அல்ல என்பதை அறிந்திருந்தான். தேவன் அழகில் வாசமாயிருக்க மாட்டார் அல்லது உண்மையாய் நடக்கிற, ஒன்றிலோ இருக்க மாட்டார். அவர் அழைக்கப்பட்டவர்களிலும், தெரிந்து கொள்ள பட்டவர்களிலுமே வாசமாயிருக்கிறார். ஆகவே, அவன் திராட்சைக் கொடியால் அந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருக்கிறான், இப்படியாக அவன் பலிபீடத்தை நோக்கி வருகிறான். 37. அவனுடைய பலிபீடம் ஒரு பெரிய பாறையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த சிறிய ஆட்டுக்குட்டியை தூக்கி இவ்விதமாக அந்தப் பாறையின் மீது கிடத்துகிறான், இன்னொரு சிறு கல்லை எடுக்கிறான், ஏனென்றால் அவர்களிடத்தில் ஈட்டியோ அல்லது கத்திகளோ இல்லை, அதன் சிறிய தலையை பின்பக்கமாக இழுத்தான்... அங்கே காயீனும் இருந்தான், அவனுடைய அழகில் தேவனை மகிமைப்படுத்தினான். "கர்த்தாவே நான் என்ன செய்தேன் என்று பாருங்கள். இங்கு கவனியும். நீர் என் இருதயத்தை அறிவீா். நான் உத்தமமாய் இருக்கிறேன் என்பதை அறிவீா். எல்லா துதியும் உமக்கே செலுத்துகிறேன், நான் இதை செய்கிறேன், அதைச் செய்கிறேன், "அவன் என்னென்ன செய்கிறானோ அவைகளையெல்லாம் சொன்னான். அந்த பழைய சிறிய ஆபேல் ,அந்த ஆட்டுக்குட்டியை எடுத்தான், குப்புற விழும்படியாய்த் தூக்கிப் போட்டான், கையில் ஒரு கல்லை எடுத்து கொண்டான், அதன் சிறு தொண்டையை அறுக்கத் தொடங்கினான் . 38. ஒரு மனிதன் ஒரு ஆட்டுக் குட்டி மரிக்கும் போது இரத்தம் வடிவதை, இரத்தம் கொட்டுவதை பார்ப்பானேயானால்... ஆபேலுடைய கரங்கள் இரத்தமா யிருப்பதை நான் காண்கிறேன். அந்த சிறிய ஆட்டுக்குட்டியின் உடலைச் சுற்றிலும் வெண்மையான முடிகள் தொங்கிக் கொண்டிருப்பதை காண்கிறேன் .அவைகள் இரத்தமாக இருக்கிறது. தேவன் கீழே நோக்கிப் பார்த்தார்; அவர் "அதுதான் இது, நீ அதை பெற்றுக் கொண்டாய்" என்றார். அது என்ன பேசுகிறது? 19 நூற்றாண்டுகளுக்குப் பிறகு எதைப் பற்றி பேசுகிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர், அவருடைய கழுத்தைச் சுற்றிலும் கயிறு சுற்றப்பட்டவராக ,தூரத்தில் காணப்படும் கொல்கோதா மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அல்லேலுயா. அவர்கள் அவரை கீழே கிடத்தினர்; அவர் சரீரத்தில் தழும்புகள் உண்டாகும் அளவுக்கு நாம் சுகமடைவதற்காக அவரை அடித்தனர், ஆணிகளால் அவருடைய கரங்களில் அடித்தனர், அங்கே அவர் வானத்திற்கும் பூமிக்கும் நடுவாக தொங்கிக் கொண்டிருந்தார். காலங்கள் தோறும் உள்ள கன்மலையில், அந்நிய பாஷையில், "ஏலி ஏலி" என்று கதறினார். அந்த ஆட்டுக்குட்டியானவா் யாரிடத்தில் அந்நிய பாஷையில் பேசினார்? பலி இடுபவரிடத்தில் பேசினார். 39. அது ஆபேலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. அந்த ஆட்டுக்குட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆபேல் அறியாமல் இருந்தான். அது இரத்தத்தை சிந்தி கொண்டிருந்தது, கொட்டிக் கொண்டிருந்தது. ஜனங்கள் இந்த ஆட்டுக்குட்டியை சாகடித்துக் கொண்டிருந்தனா், யூதர்கள் அவரை சிலுவையில் தொங்க விட்டனர், அவிசுவாசிகள், அவர் என்ன பேசுகிறார் என்பதை அறியாமல் இருந்தார்கள். அவர் "ஏலி ஏலி" என்று பிதாவினிடத்தில் பேசினார். அது ஆபேலின் ஆட்டுக்குட்டி, உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அடிக்கப்பட்டது. அவருடைய இரத்தம் தோய்ந்த முடிகள் அவரைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தன. பில்லி சண்டே என்பவர், ஒவ்வொரு மரத்திலும் ஒரு தூதன் உட்கார்ந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவை பார்த்து," உம்முடைய கரங்களை அவிழ்த்து விட்டுக் கொள்ளும். உம்முடைய விரலை அசையும், நாங்கள் இந்த காட்சியையே மாற்றி போட்டுவிடுகிறோம்" என்று தூதர்கள் கூறினதாக கூறுகிறார். யூதர்கள் சொன்னார்கள், "அவன் மற்றவர்களை இரட்சித்தான்; அவன் தன்னை இரட்சித்துக்கொள்ள முடியவில்லை, அவர் அந்த மகத்தான இரட்சகராக இருந்தால், அவர் தன்னையே இரட்சித்துக் கொள்ளட்டும், பின்பு நாங்கள் அவரை விசுவாசிப்போம்" என்று. ஏன், அவருக்குக் கொடுக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த வெகுமதி. ஏன், அவர் மற்றவர்களை இரட்சிக்கவுமில்லை, தன்னைத் தான் இரட்சித்துக் கொள்ளவுமில்லை, ஆகவே அவர் தன்னையே அர்ப்பணித்தார், மற்றவர்களை இரட்சிப்பதற்காக. அல்லேலூயா. 40. அதுதான் தேவனால் அருளப்பட்ட பலியாகும். ஒரு விசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசம் அதுதான், தொங்கிக் கொண்டிருந்தார், இரத்தம் வடிந்தது, இரத்தம் கொட்டியது, ஆபேலின் ஆட்டுக்குட்டியைப் போல மரித்துக் கொண்டிருந்தார். நல்லது, அங்கே காயீன் மிகவும் உத்தமமானவனாக இருந்தான், எவ்வளவு பக்தி உள்ளவனாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு பக்தியுள்ளவனாக, அவன் கொண்டிருந்த பலிபீடத்தைப் போலவே. அந்த பழைய ஆவி காலங்கள் தோறும் வருவதைக் கவனியுங்கள். அது இஸ்ரவேல் புத்திரர்களுக்குள் வந்ததைக் கவனியுங்கள். சற்று நேரம் நீங்கள் கவனிப்பீர்களானால், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்து வெளியே வந்த போது, வனாந்தரத்தில் அல்லது அதைக் கடப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். மோவாபியர்கள் அவர்கள் தேசத்தை கடந்து போவதை அனுமதிக்கவில்லை. இப்போது, மோவாபியர்கள் விசுவாசியாக இருந்தார்கள், மோவாப்பும் அப்படித்தான். அவர்கள் யார் என்று நீங்கள் அறிவிர்களா? அந்த மகத்தான சந்ததியார் லோத்துடைய குமாரத்தியின் பிள்ளைகள், அங்கே அவர்கள் தாங்கள் தந்தையுடன் வாழ்க்கை நடத்தினா். மூத்தவளின் பிள்ளைகள் புறப்பட்டுச் சென்றனா், அவன் மூலமாக மோவாப் தேசம் வந்தது. 41. இப்போது, இங்கே இஸ்ரவேலர்கள் வருகிறார்கள். இஸ்ரவேலர்கள் என்ன கொண்டிருந்தார்கள், மோசமான, கெட்ட காரியங்களையே பேசினார்கள். தெய்வீகமற்ற காரியங்களாய் எண்ணப்படுகின்ற ஒவ்வொன்றும் அவர்களிடமிருந்தன. இங்கே பயணித்து வருகிறார்கள். இப்பொழுது, பாலாக்கின் நிமித்தம் இஸ்ரவேலரை சபிப்பதற்காக தீர்க்கதரிசி பிலேயாம் வருகிறார். இந்த நாளுக்கு ஒத்த சாயலாயிருக்கிறது, தேவன் ஆசிர்வதித்தவைகளை சபிப்பதற்கு வாடகைக்குக் கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகள் முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலை உங்களுக்கு வந்தால், உங்களால் அதைச் செய்ய முடியாது. இங்கே அவர் வருகிறார்... வந்து ...ஏன் அவ்வாறு இருந்தார், ஏன், உருவின பட்டயத்துடன் வழியில் பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவாய் பணத்தின் மேல் பைத்தியமுள்ளவனாயிருந்தான். கழுதை அதைக்குறித்து அவரைக்காட்டிலும் அதிகம் அறிந்திருந்தது. அது சரியே. இன்னும் ஜனங்கள் அப்படிப்பட்ட நல்ல கழுதையின் சிந்தையைப் பெற்றிருப்பார்களானால் அவர்களால் அதைக்காண முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரியே. 42. இங்கே கழுதை இருந்தது, கர்த்தருடைய தூதனைப் பார்த்ததும் ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று விட்டது. தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக இருக்கிறான் என்பதை அவன் அறிவான். அதற்குப்பின் என்ன சம்பவித்தது என்று பாருங்கள். பின்னர் அவன் கழுதையை விட்டு இறங்கினான் சுற்றும் முற்றும் பார்த்தான் . இப்போது, பிலேயாம் அல்லது மோவாப் தேசத்தின் ராஜா பாலாக், அவன் நாத்திகன் அல்ல, அவன் ஒரு விசுவாசி. நிச்சயமாக அவன் ஒரு விசுவாசி. பிலேயாம் ஒரு நாத்திகன் அல்ல பிலேயாம், தீர்க்கதரிசி, ஒரு விசுவாசியாக இருந்தான். ஆனால் அந்த இரண்டு பேர்... இங்கே இரண்டு வகையான விசுவாசிகள், அவர்களுக்குள் இருந்தது ஒரே ஆவி தான், காயின் மற்றும் ஆபேலைப் போல, அவர்கள் மறுபடியும் கீழே வந்தனா். இப்பொழுது கவனியுங்கள், இங்கே ஒரு மனிதன் இருந்தான் மோவாப் தேசத்தின் இராஜா, "கீழே இறங்கி வந்து இந்த ஜனங்களை சபி" என்றார். விசுவாசிகள் விசுவாசிகளைச் சபிக்கிறார்கள். இப்போது பாலாக் கீழே இறங்கி வந்தான், மலையின் மேல் ஏறினான், பிலேயாம் பாளையத்தின் கடைக்கோடியைக் காட்டினான் . 43. பிசாசு செய்கிற காரியம் அதுதான். அவன் மிக மோசமான பகுதியைக் காட்ட விரும்பினன். தோல்வியடைந்த ஒருவனை சுட்டிக்காட்ட விரும்புகிறான். அவர்கள் "இந்த ஒருவனைப் பாருங்கள், இவன் பைத்தியக்கார மார்க்கத்துக்குள் சென்றான், அவன் வெகு தூரம் சென்று விட்டான்" என்று கூறுகின்றனா். அதேசமயம் போதுமான தூரத்திற்குச் செல்லாத பல்லாயிரக் கணக்கானவர்களை நீங்கள் சுட்டிக்காட்டாதீர்கள்,. அது சரியே. அது சரியே. நான் இங்கே வெளியே சென்று, கல்லறையைப் பார்த்து ஒரு ஸ்திரியை நான் அறிவேன்... என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், அதிக நாட்களாகவில்லை, ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானத்தை சேர்ந்த ஒரு ஸ்திரி, அவளுடைய குழந்தையை சாக அனுமதித்தாள். ஏனென்றால் அவள் ஒரு மருத்துவரை கொண்டிருக்கவில்லை. இந்தக் காரியத்தில் அவளிலிருந்து நான் வித்தியாசப்படுகிறேன்; ஆனால் எப்படியும் அது அவளுடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஒருவேளை அவள்... அல்லது - அல்லது அதைப்பற்றி அவள் எப்படிப்பட்ட விசுவாசமுடைய வளாகயிருந்தாள்... 44. இப்போது இங்கே கீழே கல்லறைக்குச் சென்று, "உங்களுடைய சுகத்திற்காகத் தேவனை விசுவாசித்து மரித்துப்போன ஒவ்வொருவரும் எழுந்திருங்கள்" என்னால் அவ்வாறு கூற இயலும். பின்னர் "மருத்துவ விஞ்ஞானத்தின் கீழ் மரித்த ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள்" என்னால் அவ்வாறு கூற முடியும். எந்தப் பக்கத்தில் அநேகர் இருப்பார்கள்? ஒரு சாராரைக் குறித்ததான காரியம் என்னவோ அதேதான் மற்ற சாராருக்கும். அதே சமயத்தில் தேச முழுக்கச் சென்று ஒவ்வொருவரிடத்திலும் தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு மதவெறி பிடித்த செயல் என்றும், அதில் எந்தக் கவனமும் செலுத்தாதீர்கள் என்றும் இன்னும் இவ்விதமாக பலவிதமான காரியங்களை சொல்லி, அது ஒன்றுமற்றது மேலும்− அது− தகுதியற்ற ஒன்று என்றும் கூறுகின்றனர். அதே வேளையில், மருத்துவ சிகிச்சையின் கீழ் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரிக்கிறார்கள். இப்போது தெய்வீக சுகமளித்தலில், அவிசுவாசத்தினால் நாம் ஒருவரை இழப்பதினிமித்தம் தெய்வீக சுகமளித்தலுக்கு எந்த கவனமும் செலுத்தக் கூடாது என்றால், பின்னர் அவர்கள் மருத்துவ விஞ்ஞானம், மருத்துவமனைகள், அல்லது மற்ற எதையும் நோக்கிப் பார்க்க கூடாது. அதற்கு இது எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. ஒரு நபர் தோல்வியடைந்தால் அதற்காக அவர்கள் எல்லாவற்றையும் தவறாக கணக்கில் கொள்வார்களா? இல்லை, ஐயா. அது இரண்டுமே ஒருங்கிணைந்திருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். தேவனுடைய மகிமைக்காகவும் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காகவும் ஒன்றாக செயல்பட வேண்டும். அது சரியே. 45. இப்போது, இவற்றை கவனிப்போம் எவ்வளவு அழகாயிருக்கிறது. பின்னர் மோவாப் இறங்கி வந்து கூறினான், "இப்போது, பாலாக்கே, பிலேயாமே இங்கிருந்து அங்கு செல்லுங்கள் நான் ஜனங்களை சபிக்க வேண்டுமென விரும்புகிறேன். அந்த மலையின் மேலிருந்து, பாளையத்தின் பின்னணியில் இருப்பவர்களை பாருங்கள்?" என்றான். "ஆம்". அவன் அதைப் பார்த்தான். இப்போது கவனியுங்கள். பிலேயாம் ஏழு பலி பீடங்களைக் கட்டினான். இப்போது, அவன் ஒரு பொதுவுடமைக் கொள்கைவாதியல்ல. அவன் ஒரு விசுவாசியாக இருந்தான். இப்போது, அவன் அந்த மலையின் உச்சியில் இருக்கிறான். இஸ்ரவேலர்கள் பள்ளத்தாக்கில் இருக்கிறார்கள். அவன் ஏழு பலி பீடங்களை கட்டுகிறான். 46. ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும், ஒரு காளையை பலியிட்டான், தேவனுக்கு எப்படிப்பட்ட பலி தேவையோ, அப்படிப்பட்ட பரிசுத்தமான பலியைச் செலுத்தினான். ஒவ்வொரு பலிபீடத்தின் மீதும் ஒவ்வொரு செம்மறி ஆட்டுக்கடாவைப் பலியிட்டான், அது இயேசுவின் வருகையைப் பற்றி பேசினது. அடிப்படையானதா? அது எவ்வளவு அடிப்படையாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு அடிப்படையாக இருந்தது. அதை கவனியுங்கள்... ஏழு என்பது தேவனுடைய பரிபூரணமான எண்ணாகும். அது ஆராதனையைக் குறிப்பிடும் எண்ணாகும்... "ஆறு நாட்களும் வேலை செய்யலாம், ஏழாவது நாளில்...” காலங்காலமாக, ஏழு சபைக் காலங்களிலேயும், மற்றக் காலங்களிலேயும், ஏழு என்பது தேவனுடைய ஆராதனைக்குரிய எண்ணாகும். இங்கே, இந்தத் தீர்க்கதரிசி, ஊக்குவிக்கப்பட்டவனாய், அவர்களுடன் வந்து, ஏழு பலிபீடங்களைக் கட்டுகிறான், வரக்கூடியவைகளுக்காக காளைகளை பலி செலுத்தி, கிறிஸ்துவின் முதல் வருகையை விசுவாசிக்கிறவர்கள் என்பதை நிச்சயப்படுத்தினார்கள், கீழே இஸ்ரவேலர்கள் பாளையத்தில் செய்தது போலவே அவ்வளவு அடிப்படையாக காளைகளை பலியிட்டான். இதை புரிந்து கொண்டீர்களா? 47. மலை உச்சியில், பாலாக் எப்படிப்பட்ட பலிகளை செலுத்தினானோ, அதே பலிகளை இஸ்ரவேலரும் செலுத்தினார்கள். ஒரு செம்மறியாட்டுக் கடாவை பலியிடும் போது, "என்றாவது ஒருநாள், தேவன் அவருடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்புவார் என்று விசுவாசிக்கிறோம்" என்று கூறினார்கள். இங்கே, மலையின் உச்சியில், அடிப்படைவாதி களாயிருந்து, "தேவன் அவருடைய குமாரனை அனுப்புவார் என்று தேவனை விசுவாசித்து செம்மறியாட்டுக் கடாவைப் பலியிடுகிறோம்" என்றார்கள். கவனியுங்கள், பலிகளில் இருந்து எழும்புகிற புகையைச் சுற்றிலும் மோவாபியரின் பிரபுக்கள் நின்று கொண்டு, தேவனை ஆராதித்தார்கள். அடிப்படையான காரியங்கள் எவ்விதம் இருக்க வேண்டுமோ அவ்விதமாக வேதபூர்வமாக, மற்றக் குழுவினர் என்ன செய்தனரோ அதே போன்று சிறப்பாகச் செய்தார்கள். நண்பர்களே இங்கு இன்று நடப்பது போலவே அங்கும் இருந்தது. ஜனங்கள் உங்களுடைய கோட்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டது போல் காணப்படலாம். அப்படிப்பட்ட மனிதர்களை நான் அறிவேன், அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் கணக்கில் உள்ளனர்… அவர்களில் அநேகர் ஒருவேளை இங்கு அமர்ந்து கொண்டு, சரியாக இன்றே என்னை கவனித்துக் கொண்டிருக்கலாம். இதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் உங்களை இது புண்படுத்தும் என்று நான் நம்புகிறேன். 48. கவனியுங்கள். நீங்கள் அடிப்படைவாதியாக இருக்கலாம்… அதைக்குறித்து நான் கவலை கொள்ளவில்லை… ஜனங்கள் கன்னிப் பிறப்பை குறித்தும், மரணத்தைக் குறித்தும், அடக்கம், உயிர்த்தெழுதல், அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தும் பிரசங்கம் செய்கின்றனர். அது உண்மை. அதனுடன் உங்களோடு நான் தர்கிக்க முடியாது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், அதுவே சத்தியமும் ஆகும். நானும் அதையே விசுவாசிக்கிறேன். பிலேயாமும் அதையே செய்தான். இஸ்ரவேலும் அதையே செய்தார்கள். ஆனால் பாலாக் என்ன பார்த்தான்- கீழே இந்த பாளையத்தில் அற்புத அடையாளங்கள் அவர்களைத் தொடர்வதை காணத் தவறி விட்டான். இன்றும் கூட அவர்கள் அதைக்காண தவறிவிட்டார்கள்.நம்மைப் போலவே அவர்களும் அடிப்படைவாதிகளாக இருந்தனர். நாம் விசுவாசிப்பது போலவே அவர்களும் விசுவாசிக்கிறார்கள். ஆனால், ஜனங்கள் மத்தியில் உயிர்ப்பிக்கும் வல்லமை கிரியை செய்கிறது என்பதை மறுதலிக்கின்றனர். நல்லது, அது அவ்வாறுதான் இருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் பேசினாரா? “துரோகிகளாயும், துணிகரமுள்ள வர்களாயும், இறுமாப்புயுள்ளவர்களாயும், தேவப்பிரியரா யிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று பவுல் கூறியுள்ளார். அல்லேலுயா. 49. தொடக்கத்திலும் அவ்வாறே இருந்தது. அங்கே ஒரு நடுத்தர காலம் உண்டாயிருந்தது. அது அடிப்படைக் கொள்கைகளையுடைய குழுவினர் தான், இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறைந்து கொன்றனர். ஏனென்றால், அவர் அற்புதங்கள் அடையாளங்கள் செய்பவராக இருந்தார், அதை அவர்கள் விசுவாசிக்கவில்லை; அதே ஆவி இந்நாட்களில் சபைகளில் ஜீவிக்கிறது; ஒரு மார்க்க சம்பந்தமான ஜனங்கள் அவர்கள் ஒரு கூட்ட நாத்திகவாதிகள் அல்ல, அடிப்படைவாதிகள். சரியாக அங்கே இடம் பிடித்துள்ளனர். அவர்கள் மிகவும் சரியானவர்களே. ஆனால் அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருக்கிறார்கள், அடிப்படையில் அவர்கள் சரியே. ஆனால் அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். வல்லமை, அது என்ன? சுகமாக்கும் வல்லமை, சத்தமிடும் வல்லமை, அந்நிய பாஷையில் பேசும் வல்லமை, வியாக்கியானம் செய்யும் வல்லமை, தொடக்கத்தில் இருந்தது போல சபையின் வல்லமை. சகோதர, சகோதரிகளே, ஒரு விசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் போராடுகிறோம். அல்லேலூயா. இதை விசுவாசிக்கிறீர்களா? 50. விசுவாசத்திற்காகப் போராடுதல் நான் ஒரு அடிப்படைவாதி. பாப்டிஸ்ட்டுகள் போல, மெத்தடிஸ்ட் போல, பிரஸ்பிட்டேரியன் சபை போல, கிறிஸ்துவின் சபை போல, மற்றவர்கள் யாவரும் விசுவாசிப்பது போல நானும் வேதாகமம் கூறுவதை விசுவாசிக்கிறேன். ஆனால் சகோதரனே, நீங்கள் அசலான காரியத்தை விட்டுவிடுகிறீர்கள் எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ள காரியங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் அது நல்லது தான். ஆனால் அந்த எழுத்துக்களை உயிர்பிக்கிற ஆவியை நீங்கள் பெறவில்லை. அங்கு தான் காரியம் இருக்கிறது. சபையே, ஆகவேதான் இன்று நான் பரிசுத்த உருளைகள் என்று அழைக்கப்படுபவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன். ஏனென்றால் அதுவே சத்தியம். அங்கு கவனியுங்கள்,"ஏன் அவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பைக் கூடக் கொண்டிருக்கவில்லை" என்று பாலாக் ஏன் கூறினான். அமைப்பை உண்டாக்கிக் கொள்ளுதல், அதைத்தான் இன்று ஜனங்கள் கூறுகிறார்கள். "நல்லது, நான் மெத்தெடிஸ்ட் சாந்தவன் என்று கூறுகின்றனர். நான் பாட்டிஸ்ட் சபையைச் சார்ந்தவன்" என்று கூறுகின்றனர். அதேபோலத்தான் பெந்தெகொஸ்தேவும் கூட மோசமானது ஆகும். "நான் ஒரு அமைப்பைச் சார்ந்தவன்." 51. இப்பொழுதே நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். அப்படிப்பட்ட அமைப்புக்களுடன் தன்னை ஒருபோதும் இணைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியத்தை அவர் செய்யவில்லை. அவர் ஒருபோதும் அதை செய்யவில்லை; ஒருபோதும் அவர் அதைச் செய்ய மாட்டார். இல்லை ஐயா. ஒவ்வொருவரும்... நான் இப்போதே சரித்திரக்காரர்களின் கவனத்தை ஈர்க்கப் போகிறேன். எல்லாக் காலங்களிலும் அப்படிப்பட்ட சபை எழும்பினது இல்லை... தோற்றுப் போய்விட்டது... தேவனுடைய வல்லமையை அற்புதங்களை, சபைக்கு வெளியிலே நடப்பதை அவர்கள் காணத் தவறி விட்டனர். தேவன் அவளை அலமாரியில் வைத்து விடுகிறார், அவள் ஒருபோதும் மறுபடியும் எழுப்புதலை அடைய மாட்டாள். அங்கே அவர் லூத்தரன்கள், மெத்தடுஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பைட்டேரியன்களை வைத்தார். பெந்தெகொஸ்தேவும் அதை நோக்கி சரியாக இப்பொழுதே போய்க் கொண்டிருக்கிறது. "நான் திரும்பவும் அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று அவர் கூறினதைப் போன்று, எல்லாவிதமான கூட்டமைப்புகளிலிருந்தும், தேவன் அங்கே அடிமரத்திலிருந்து மற்றொன்றை எழுப்புவார். 52. நாம் ஒரு பயங்கர சத்தத்தை எழுப்பக்கூடிய கூட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நல்லது சகோதரனே, அங்கே ஏதாவது சத்தம் உண்டாயிருக்கிறது என்பதை உங்களுக்கு என்னால் நிருபித்துக் காட்ட இயலும், அவ்வாறு சத்தம் எழுப்பப்படவில்லை என்றால் அங்கே தேவன் இல்லை. கவனியுங்கள். பழைய ஏற்பாட்டில், ஆரோன் சாரோனின் ரோஜாவால் அபிஷேகிக்கப்பட்டபோது, அவர் அந்த அபிஷேக எண்ணெயைப் பெற்றபோது, அவருடைய தாடியின் வழியாக வடிந்து, அங்கியை நனைத்து, அங்கியின் கடைசிப்பாகம் வரைச் சென்றது, அவர் பலியை எடுத்துக்கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றார். அவர் திரையைக் கடந்து சென்றபோது, அவருடைய வஸ்திரத்தில் ஒரு மாதுளை பழமும், ஒரு மணியும் கட்டியிருந்தது. ஆகவே அவைகள் ஒன்றை ஒன்று மோதக்கூடியதாய் இருந்தது. அவர் நடந்த போது, அவைகள் ஒன்றை ஒன்று மோதும், "கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்" என்று ஓசை எழுப்பும். அதுதான் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய சபை, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்கிறது. 53. சகோதரனே இங்கு கவனியுங்கள், ஏன் அதைச் செய்தார்கள் என்றால், அவர் ஜீவனோடு இருக்கிறார் என்று சொல்வதற்கு அந்த ஒரு வழியாக மட்டுமே முடிந்தது. ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனித்துக் கேட்டனர். அங்கிருந்து ஒரு சத்தமும் வரவில்லை என்றால், அவர் மரித்துப் போய்விட்டார். அது தான் இன்றும் கூட, மறுபடியும் பிறந்த சபை, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகும்போது, தேவனுடைய மாதுளைப் பழ மணிகளால் அபிஷேகிக்கப்படுகிறார்கள்... அல்லேலூயா. ஆம், ஐயா. அவர்கள் ஜீவிக்கிறார்கள், அதை நீங்கள் அறிவீர்கள். " கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்" என்று ஒரு மணி ஓசை எழுப்புகிறது. வெளியில் உள்ளவர்கள் அதைக் கடந்து செல்லும்போது, பரிகாசக்காரர்கள் "அவர்களைப் பாருங்கள்" என்று கூறுகிறார்கள். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது. பின்னர் அவர்களைக் கவனியுங்கள். அல்லேலுயா. எவ்வளவு அதிசயமாயிருக்கிறது. "கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்" மாதுளை பழங்களோடு மணிகள் மோதின. கவனியுங்கள், பிலேயாம் பின்னால் இருக்கிறான், இன்னும் அவனுடைய செயலை விட்டு ஒழியவில்லை. கவனியுங்கள் அங்கு நின்று கொண்டிருக்கிறான். கீழே இருப்பவர்களைப் போலவே அவனும் அடிப்படை கோட்பாடுகளை உடையவனாயிருந்தான், அதே கோட்பாடு. ஆனால் அவர்களுக்குள் அற்புத அடையாளங்கள் இல்லை. ஆனால் இந்தக் குழுவினரே அற்புத அடையாளங்களை உடையவர்களாயிருந்தார்கள்... எல்லாவற்றையும் அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் பாதையில் தெய்வீக சுகமளித்தலுக்கான திட்டங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தக் கூட்டத்தாருக்கோ அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதிருந்தார்கள். அது இந்த நாட்களுக்கு ஒத்திருக்கவில்லை என்றால், அதைப்பற்றி ஒன்றுமே எனக்குத் தெரியாதிருந்திருக்கும். 54. அடிக்கப்பட்ட ஒரு கன்மலை அவர்களுக்கிருந்தது... அவர்களுக்குத் தண்ணீர் வேண்டும் போது, உடனே சென்று தண்ணீர் குடிப்பார்கள். அந்த வழியில் தான் சபையும் இன்று இருக்கிறது. ஆவிக்குள் நீங்கள் எல்லாவிதமான காரியங்களையும் பெறும் போது, சிறந்த, பழங்கால பரிசுத்த ஆவியின் கூட்டங்களுக்குச் செல்லுங்கள். கன்மலை அடிக்கப்படுகிறது, தண்ணீர் புறப்பட்டுச் செல்கிறது. ஒவ்வொருவரும் மேலும் கீழும் குதிக்கத் தொடங்குகிறார்கள், மேலும் கீழும் குதித்து, அதிலே பொங்கி வருகின்றனர். நிச்சயமாக, அடிக்கப்பட்ட கண்மலை அவர்கள் மத்தியில் இருந்தது. அது சரி. மேலும் வெண்கல சர்ப்பமும் அந்த ஜனங்கள் மத்தியில் இருந்தது. (உண்மையாக) தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு தேவனுக்கு தேவையான ஒன்று. தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பு கிறிஸ்துவின் மேல் சுமத்தப்பட்டது. மோசே தன் கையில் வைத்திருந்த அந்தக் கோல். அது மோசேனுடைய கோல் அல்ல. அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோல். அந்தக் கோல் கன்மலையை அடித்தது, அங்கே அந்த கன்மலையில் ஒரு பிளவு ஏற்பட்டது. ஒருநாளில் இஸ்ரவேலர்கள் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று விரும்பினால், அங்கே அதனருகே சென்றார்கள். அவர்கள் அந்த கன்மலையில் தேனைக் கண்டுபிடித்தார்கள். அங்கே நானும் கூட அதை கண்டேன். நீங்கள் அதைக் காணவில்லையா? 55. அவர்களுக்கு தாகம் எடுத்தபோது, கன்மலையில் தண்ணீரைக் கண்டார்கள். ஆமென். அவர்களுக்குத் தேவையானது எல்லாவற்றையும் அவர் கொடுத்தார். அவர் இன்றும் கூட அவ்வாறு செய்து வருகிறார். அங்கே அடிப்படை வாதிகள் நின்று கொண்டு அவர்களை பரிகாசம் செய்தனர். அங்கே தேவன் அவருடன் பேசினார். அது நிச்சயமாகவே... எவ்வாறு அது இன்று பொருத்தமாக இருக்கிறது... அந்த நாளின் வாடகை தீர்க்கதரிசி போல. அவர்கள், "நிச்சயமாக அந்த ஒரு கூட்ட ஜனங்கள், ஒரு கூட்டம் மார்க்க சம்பந்தமான குள்ள நரிகளின் கூட்டம், கதறியும், ஓலமிட்டுக் கொண்டும் செல்கிறார்கள். நல்லது, நிச்சயமாக, ஒரு பரிசுத்தமுள்ள, நீதியுள்ள தேவன் அப்படிப்பட்ட ஜனங்களை சபிப்பார்" என்று கூறுகிறார்கள். பிலேயாமும் அவ்வாறு தான் எண்ணினான். ஆகவே, அவன் அவர்களுடன் அந்த ஜனங்கள் மீது சாபத்தை வைப்பதற்காக சென்றான். அவன், "தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை நான் எப்படி சபிக்க முடியும்? என்றான். அவன் சாபத்தை வீசிய போது, அங்கே வெண்கல சர்ப்பம் இருப்பதையும்,அடிக்கப்பட்ட ஒரு கன்மலை இருப்பதையும், அந்த சாபத்தை சந்திப்பதற்கு அங்கு இருக்கிறதையும் அவன் கண்டான். அந்தப் பலி சபைக்கு முன்பதாக கடந்து போவதைக் காணத் தவறி விட்டான். 56. மேலும் நீங்கள், "நல்லது, இப்போது சகோதரனே, நாங்களும் பலியை விசுவாசிக்கிறோம். நல்லது, அதனால்... "நாங்கள் விசுவாசிக்கிறோம்" என்று கூறலாம். நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். காயினும் கூட விசுவாசித்தான். ஆனால் தேவன் ஆபேலின் விசுவாசத்தை, அவனுடைய பலியை அங்கீகரித்து உறுதிப்படுத்தினார். நீங்கள் விசுவாசித்த போது, அதுவே போதுமானதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் விசுவாசித்தால், ஒரு உண்மையான விசுவாசிக்குத் தேவன் நீங்கள் விசுவாசித்த அந்த நேரமே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுக்கிறார். அல்லேலூயா. இப்போதே நான் மார்க்க சம்பந்தமான உணர்ச்சியடைகிறேன். கவனியுங்கள், எவ்வளவு மகிமையுடையதாயிருக்கிறது. அங்கே நான் கவனித்தேன், அங்கே அவன் சென்றடைந்த போது, அவன், "இப்போது நீ பின்னாகப் போ, ஆனால் ஒன்று செய்... ஆனால் நான் என்ன கூறுகிறேனோ, சரியாக அதையே நீயும் கூற வேண்டும்" தேவன் அவ்வாறு பிலேயாமிடத்தில் கூறினார். அவன் திரும்பிப் போக வேண்டும் என்று அவனுக்குக் கூறப்பட்டது, ஆகவே தீர்க்கதரிசிப் பின்னாகச் சென்றார். அங்கே அவன் சென்றபோது, அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக, அல்லது− அல்லது இஸ்ரவேலரை சபிப்பதற்குப் பதிலாக− அவன் இஸ்ரவேலரை ஆசிர்வதித்தான். அவன் திரும்பிப் பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான். 57. ஏன், அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினான், அவ்வாறு நான் யூகிக்கிறேன். ஆனால் கவனியுங்கள், அவன் அவர்களை ஆசீர்வதித்தான். ஏனென்றால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவன் கூறுவதை கவனியுங்கள், “நான் யாக்கோபிலே அக்கிரமத்தை காண்கிறது இல்லை” என்றான். அவன் கன்மலையின் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். தேவன், "அவனை மலையின் உச்சியிலிருந்து பார்த்தேன்" என்று கூறினார். அல்லேலூயா. அவருடைய சபை, அவருடைய குழுவினர், ஏன், அவர்கள் தேசமாக இல்லை. மற்ற ஜனங்களைப் போல அவர்கள் தங்களுக்குள் எந்த அமைப்பையும் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கென்று ஒரு அமைப்பு இருந்தது. ஆனால் இல்லை− அவர்கள் ஒரு தேசமாக இல்லை. அவர், "அவர்கள் ஒரு கூட்டம் ஜனமாக வாசமாயிருப்பார்கள். அவர்கள் ஒரு தேசமாக இருக்க மாட்டார்கள்" என்று கூறினார். இன்று தேவனுடைய சபையும் நடக்க வேண்டிய வழியும் அதுவே, வெளியே அழைக்கப்பட்ட ஜனங்கள். நீங்கள் ஒரு மெத்தடிஸ்ட்-ஆக இருப்பதால் அது அந்த பொருளைத் தராது, நீங்கள் ஒரு பெந்தொகொஸ்தேயினனாக இருப்பதால் அது அந்த பொருளைத் தராது, அதன் பொருள் என்னவென்றால் ஒவ்வொரு குழுவிலிருந்தும் வெளியே அழைக்கப்படுதல், தேவன் ஜனங்களை அழைக்கிறார், பரிசுத்த ஆவியை அருளுகிறார், அதுதான் சபை, அழைக்கப்பட்ட சபை. நிச்சயமாக அதுதான். அவர் அவர்களை வெளியே அழைக்கிறார். அவர்கள் ஒரு அமைப்பல்ல; அவர்கள் ஒரு அவயமாக இருக்கிறார்கள். அவர்களின் இருதயம் ஒன்றாகத் துடிக்கிறது. அவர்கள் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள். அல்லேலூயா. 58. ஓ, அவன் சொன்னான்− "நல்லது அவர்கள்... அவர்களைக் கவனியுங்கள் அவர்கள் ஒரு தேசமாகக் கூட இல்லை. அவர்கள் பழைய, சிறிய பொதுச்சேவை செய்யக்கூடிய, பரிசுத்த உருளைகளுக்கு முன்மாதிரியான ஒரு கூட்டம்" என்றான். அது சரியே. நல்லது, அவர்களைப் பாருங்கள். நல்லது, பிரபுக்கள், ஆயர்கள், பேராயர்கள், எல்லா பெரிய மூப்பர்களும் அங்கிருந்தனர். இந்த உலகத்தில், தேவன் எவ்வாறு இந்த சபைகளுடன் அசைவாடுவார், என்னால் சொல்ல முடியாது. கவனியுங்கள், பரிசுத்த வேதாகமத்தில், சபையில் மிக உயர்ந்த ஸ்தானம் மூப்பர் தான். ஆனால், ஆயர் சொல்வது வரைக்கும் மூப்பர்கள் அசைய முடியாது. எனவே, தேவன் ஆயர் மூலமாக வரவேண்டும். மூப்பரை அணுகுவதற்கு, ஓ, தேவன் கிட்டத்தட்ட பதினைந்து வித்தியாசமான நபர்களைத் தாண்டி வரவேண்டியுள்ளது. 59. ஆனால் உங்களுக்கு நான் கூறட்டும், தேவனுடைய சபை தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுகிறது. ஆவியானவர் நடத்தும் வழியில் அவர்கள் நடக்கிறார்கள். ஆயர்களோடு இடைபடுவதாக தேவன் ஒருபோதும் வாக்களிக்கவில்லை. மூப்பர்கள் தேவனுடைய ஒவ்வொரு சபைக்கும் தலையாய் இருக்கிறார்கள். இப்போது, தேவன் செய்தியை அனுப்புகிறார், அவர் அதை அவருடைய மூப்பர்களுக்கு அனுப்புவார். ஆனால், அவர் வெளியே சென்று, ஆயர் என்ன கூறுகிறார், மேலும் மாவட்ட பிரஸ்பைட்டர் என்ன கூறுகிறார் என்று பார்க்கச் சொன்னால்... சபையில் உள்ள ஒவ்வொருவரும், உங்கள் தொப்பியில் உள்ள இறகுகளை இழுப்பார்கள். "ஒருவேளை நான் அடுத்த வருடம் மாவட்ட உயர் பதவியை அடையலாம். அதற்கு இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் என்று தந்திரங்களை கையாள வேண்டும்." சகோதரனே, அந்த மாவட்ட மனிதனைக் குறித்த கவலை எனக்கில்லை, அடுத்த வருடம் ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லேலூயா. ஒரு விசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராட வேண்டும்... 60. கவனியுங்கள், அந்த ஆவி கீழே இறங்கி வரும் போது... அது இயேசு கிறிஸ்துவின் நாட்களில் வந்தது. இங்கே இயேசு இருந்தார். அவர்களைப் போலவே அவர் அடிப்படைவாதியாக இருந்தார். அவரைப்போலவே அவர்களும் அடிப்படை வாதிகளாக இருந்தனர். ஆனால் அவர் அற்புத அடையாளங்களைக் கொண்டிருந்தார், விசுவாசிகள் அவரைப் பின்பற்றுகிறார்கள். அவர்களோ அவரை மறுதலித்தார்கள். அவரை புறக்கணித்தார்கள். அதே பழைய காயினீன் ஆவி தொடக்கத்திலிருந்தே அசைவாடிக் கொண்டிருக்கிறது, பக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டு... மேலும் இப்போது, கவனியுங்கள், கடைசி நாட்களில் கொடிய காலம் வரும் என்றும், மனிதர்கள் சுகபோகப்பிரியராயிருப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் பேசினார். நான் முனைவர் இன்னார் இன்னார்... பெருமைக்காரர்களாகவும், தங்களைக் குறித்தே தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர்களாகவும், தூஷிக்கிறவர்களாகவும், கீழ்படியாதவர்களாகவும், தலைக்கனம் உள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாகவும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், சத்தியத்தை மறுதலிக்கிறவர்களாகவும், துரோகிகளாயும் கொடுமையுள்ளவர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்" என்று, அப்படிப்பட்டவைகளை விட்டு திரும்புங்கள். பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள். இது ஒரு வகை. 61. "நல்லது, நாங்கள் தையல் மற்றும் தையல் கலைகூட்டங்கள் வைத்துள்ளோம்". தையல் மற்றும் தையல், ஆம், நீங்கள் தையுங்கள், தையுங்கள், மேலும் கோர்த்தும் தைத்தும், கோர்த்தும் தைத்தும், செல்வி இன்னார் இன்னார் என்று பேசுவது, இன்னும் அநேகத்தை குறித்து பேசுவது. ஏன், அது வெட்கக் கேடானது. உங்களுக்கு தேவையாயிருப்பதெல்லாம், பழைய காலத்து மேலறை அனுபவமே, ஜெபக்கூட்டத்துடன், நீங்கள் எங்கே ஜெபிக்கிறீர்களோ, அங்கேயே தேவனுடைய வல்லமை, பரிசுத்த ஆவி அசைவாடத் தொடங்கும். அதுதான் உங்களுக்கு தேவையானது. ஒருவிசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராடுதல்... அங்கே தொடக்கத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்... இந்த வித்தியாசமான காரியங்கள் சங்கங்கள், அந்த அமைப்பு, இந்த அமைப்பு போன்றவைகள் அவரிடத்தில் இல்லை. அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருந்தனர். பரிசுத்த ஆவி அவர்கள் மீது ஊற்றப்பட்டது. அவர்கள் அற்புத அடையாளங்கள் செய்பவர்களாக புறப்பட்டு சென்றனா். 62. இயேசு கிறிஸ்து, இந்த பூமியை விட்டுச் சென்றபோது கூறிய கடைசி வார்த்தைகள், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்..." அது சரியே. அவருடைய சபைக்கு அவர் கொடுத்த முதல் கட்டளை. அது என்னவாக இருந்தது. மத்தேயு 10−வது அதிகாரம். "வியாதியஸ்தரை சுகப்படுத்துங்கள், குஷ்டரோகிகளை சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிருடன் எழுப்புங்கள். இலவசமாக பெற்றீர்கள் இலவசமாக கொடுங்கள்". அல்லது "தேவன் எதை உங்களுக்குக் காண்பிக்கிறாரோ, அவர் செய்யச் சொன்னதையே செய்யுங்கள்". அதுவே தான் கடைசியாகச் சபைக்கு கொடுக்கப்பட்ட கட்டளையும். அவர் மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த நேரத்தில் அவருடைய பரிசுத்தமான உதடுகளிலிருந்து உதிர்ந்த கடைசி வார்த்தைகள், " நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களைத் தொடரும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்". 63.நாம் கூறுகிறோம்... "ஓ, விசுவாசியின் அடையாளம் இங்கே இருக்கிறது. அவன் சபைக்குச் செல்கிறான். அவன் ஒரு நல்ல மனிதன். அவன் தன்னுடைய கடன்களை அடைக்கிறான். " அது சிறந்தது. அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவன் தன் பிள்ளைகளைக் கல்வி பயிற்றுவிக்கிறான். அது சிறந்தது. அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அது ஒரு விசுவாசிக்குரிய அடையாளம் அல்ல. சுவிசேஷத்தை பிரசிங்கிப்பதும் ஒரு விசுவாசியின் அடையாளம் அல்ல. இயேசு சொன்னார்; "இந்த அடையாளங்கள் விசுவாசியை பின்தொடரும், என் நாமத்தினாலே பிசாசைத் துரத்துவார்கள்; அந்நிய பாஷையில் பேசுவார்கள்; சர்ப்பத்தை எடுப்பார்கள்; சாவுக்கேதுவானதைக் குடித்தாலும் அவர்களைச் சேதப்படுத்த மாட்டாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சுகமடைவார்கள்." இன்று அதைச் செய்தால், உன்னை பார்த்து நகைப்பார்கள். தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள். சகோதரனே, பிலேயாமைப் போல இருக்க விரும்பவில்லை. (நான் பிலேயாமாக இருக்க விரும்பவில்லை, ஆனால் பிலேயாமைப் போன்று கூறுகிறேன்) அவன் திரும்ப வந்து அவன் அந்த பரிசுத்த உருளைகளுக்கு தேவன் என்ன செய்தார் என்பதைக் கண்டான். அவன் நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக" என்றான். ஆமென். நானும் அதையே கூறுகிறேன். 64. பரிசுத்த உருளை என்று என்னை அழைக்க விரும்பினால் அவ்வாறு அழையுங்கள், ஆனால் நீதிமானைப் போல நான் மரிக்கட்டும். என்னுடைய கடைசி முடிவு. தேவன் யாக்கோப்பை ஆசிர்வதித்தது போல இருக்கட்டும். அல்லேலூயா. நான் உற்சாகம் கொண்டேன் என்று நீங்கள் நினைப்பதை நான் அறிவேன்; ஒருவேளை நான் அவ்வாறு இருக்கலாம். ஆனால் நான் பயங்கரமான அதே சமயத்தில் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டவனாக இருக்கிறேன். நீங்களும் கூட உற்சாகம் அடைய வேண்டும். ஆமென் நியூ ஆல்பெனியில் ஒரு மூதாட்டி, பதினேழு வருடம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். என்னுடைய ஜீவியத்தில் அவர்களை ஒருபோதும் எனக்கு தெரியாது. பரிசுத்த ஆவியானவர் அவர்கள் எங்கே வசித்தார்கள் என்று எனக்குக் கூறினார். அவர்கள் ஆர்மீனியர்கள். அவர்களின் பெயர் திருமதி ஓஹன்னியா, திருமதி டேரல் ஓஹன்னியா என்பதாகும். அவர்கள் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான் அங்கே நடந்து சென்றேன். அவர்களைப் பார்த்தேன். ஒரு சிலந்திப் பூச்சியைப் போலக் காணப்பட்டார்கள், படுத்த படுக்கையாய்க் கிடந்தார்கள். 65. அவர்களுடைய வாலிப வயதுடைய மகள், பதினேழு வயதிருக்கும், அவளுடைய பெயர் டோரோதி என்பதாகும். அவர்கள் 1900 ஓக் தெரு, நியூ ஆல்பினியில் வாழ்ந்து வந்தார்கள். இது பல வருடங்களுக்கு முன்பாக நடந்தது. அங்கே நான் சென்றேன். நான், "இப்போது, அவர் காட்டின வீடு இதுதான்" என்று கூறினேன். அங்கே அவர்கள் வீட்டிற்கே சென்றேன். அந்தப் பெண் கதவு அருகே வந்தாள். நான், "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவள், "நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். அதற்கு நான்... உண்மையாகவே அவள் என்னைப் பார்த்து வினோதமாக நகைத்தாள். திரு மெல்லி அவர்களே, செயின்ட் எட்வர்டு மருத்துவமனையில் நடந்த சுகமாக்குதலைக் குறித்து என்னுடைய புத்தகத்தில் வாசித்திருந்தார். அது பத்திரிகைகளில் கூட வந்திருந்தது. "அங்கே சென்று அந்த மனிதனை சுகப்படுத்திய மனிதன் நீர்தானா?" என்று கேட்டார். "இல்லை அம்மா" என்று பதிலுரைத்தேன். நான், "முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சீமாட்டி இங்கே இல்லையா" என்று கேட்டேன். அவள், "என்னுடைய தாயார் தான் " என்றாள். 66. சற்று ஒதுங்கி நின்று, "உள்ளே வாருங்கள்" என்று கூறினாள். சற்றுப் பின்னால் சென்றாள். அவள் ஒரு வாலிபப் பெண்ணாக, பதினேழு வயதுடையவளாய் இருந்தாள் என்று அனுமானிக்கிறேன். அவள் தன்னுடைய சகோதரனுடைய காலணிகள் அணிந்திருந்தாள். அவள் பின்னாகச் சென்று ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றாள். அங்கே தான் அந்த வயதான அம்மையார் கிடத்தப்பட்டிருந்தார்கள். "அது அவள்தான், அது அவளே தான்" என்று நான் கூறினேன். "சகோதரியே, நீங்கள் எதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இது ஒரு ஆர்மீனிய வேதாகமம்" என்று பதிலுரைத்தார்கள். " நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவா்கள், "அந்த மனிதன் சுகமாக்கப்பட்டார் என்ற செய்தியை பத்திரிக்கையில் பார்த்தது முதலாய், "எனக்கு நம்பிக்கையிருக்கிறது" என்றார்கள். " தேவன் உங்கள் ஜெபத்தை கேட்டார், நான் உங்களுக்கு ஜெபிக்கதக்கதாக, அவர் என்னை அனுப்பி வைத்துள்ளார்" என்று நான் கூறினேன். 67. அந்த அம்மையார் படுக்கையை விட்டுக் குதித்து எழுந்து, வீடு முழுக்க சுற்றி ஓடினார்கள், பரிபூரணமான சுகத்தைப் பெற்றார்கள். அவர்களுக்கு எழுதுங்கள் அல்லது போய்ப் பாருங்கள். சுற்றுப்புறத்திலுள்ள அநேக ஜனங்கள் அங்கு உண்டான பெரும் இரைச்சலைக் கேட்டு, அங்கே ஏதோ அடக்க ஆராதனை நடக்கிறது என்று எண்ணினார்கள். அது அவ்வாறு இருந்தது. ஒரு பழைய மனிதன் மரித்து, ஒரு வாலிப வயதுடையவன் மறுபடியும் பிறந்தான். எல்லாம் சரி. அவள் அங்கேயிருந்து வெளியே வந்த போது, "அவள் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டாள்" என்று அவர்கள் கூறினார்கள். அவ்வளவுதான், அவள் மிகவும் உற்சாகம் கொண்டாள், அதினிமித்தம் இறுகின அவளது கால் தசைகள் விடுபட்டன” என்றனர். ஏறக்குறைய ஐந்து வருடம் கழித்து, ஒரு கசாப்புக் கடையில் நின்று கொண்டிருந்தேன், கண்ணாடி வழியாக அவர்கள் உள்ளே வருவதை நான் பார்த்தேன். அவர்களின் கணவனோடு நடந்தார்கள். அந்த கையைக் கொண்டு என்னை தொட்டார்கள். அவர்களை காணாதது போல் நான் பாவனை செய்தேன். நான் வேறு ஒரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டேன். அவர்கள், "நான் உங்களை முட்டாளாக்கிவிட்டேன், அப்படி செய்தேனா? என்றார்கள். அதற்கு நான், "இல்லை" என்று கூறினேன். " சகோதரர் பிரன்ஹாம்" என்றழைத்து, "நீண்ட காலத்திற்கு முன்பாக, உங்களுக்கு நினைவிருக்கிறதா, நான் மிகவும் உற்சாகமுடையவளாக இருக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள். "ஆம், அம்மா " என்று பதிலுரைத்தேன். அவர்கள், "இப்போது கூட நான் உற்சாகமுள்ளவளாக இருக்கிறேன், ஏனென்றால் இப்போது கூட நான் நடந்து கொண்டிருக்கிறேன்" என்றார்கள். ஆமென். 68. அப்படியானால் நீங்களும் உற்சாகம் கொள்வது நல்லது. சகோதரனே, உற்சாகம் அடைவது வியாதியை சுகமாக்காது. தேவனுடைய வல்லமையே நோயாளியைச் சுகப்படுத்துகிறது. காலங்கள் தோறும்... அது சாயங்கால வெளிச்சம் விழுந்து கொண்டிருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், ஈசாக்கு மனைவியை அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருடைய தகப்பனார் ஆபிரகாம் வேலைக்காரனை அனுப்பினார். அது தேவனாகிய பிதா அவருடைய மணவாட்டியை பெற்றுக் கொள்வதற்கு அனுப்புவதற்கு ஒரு அழகான சாயலாக இருக்கிறது. அவருடைய வேலைக்காரர், பரிசுத்த ஆவியானவர், எலியேசா்... அது குளிர்ச்சி பொருந்திய சாயங்கால நேரமாக இருந்தது. அப்பொழுது தான் அழகிய ரெபேக்காள் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்க்க வெளியே வந்தாள். அந்த கதையை நீங்கள் அறிவீர்கள். 69. அழகிய ரெபேக்காள் வெளியே வந்தாள் . அவர் சொன்னார், "இப்போது ஒட்டகத்திற்கு யார் தண்ணீர் வார்க்கிறார்களோ" என்று, அவர், "கர்த்தாவே, நீர் தெரிந்து கொண்ட ஒன்று இதுவாக இருக்கட்டும்" என்றார். ரெபேக்காள் சென்று ஒட்டகத்திற்கு தண்ணீர் வார்த்தாள். அவைகள் தண்ணீர் குடித்தன. பின்னர் அவருடைய எல்லாம் மிருகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள். கவனியுங்கள், எந்த மிருகத்திற்கு அவள் தண்ணீர் வார்த்தாளோ அதே மிருகம்... விலங்கு ஒரு மிருகத்தை பிரதிபலிக்கிறது, உண்மையாகவே, ஒரு மிருகம் சுமை சுமக்கும் ஒன்று. பரிசுத்த வேதாகமத்தில் அதின் பொருள் என்னவெனில், "வல்லமை" என்பதாகும். எந்த விலங்கிற்குத் தண்ணீர் வார்த்தாளோ, அதே விலங்கு தான் அவளை சுமந்து சென்று மணவாளனை காணச் செய்தது. அது சரியா? தண்ணீர் வார்ப்பது என்றால் என்ன? இப்பொழுது துதிகளினாலும், நன்றி கூறுவதினாலும், மகிமையை செலுத்துவதினாலும், இப்படிப்பட்ட வல்லமையினால் தான், வல்லமையையும், பலத்தையும் அருளிச் செய்கிற அதே பரிசுத்த ஆவியானவர் நம்மை சுமந்து சென்று ஒரு நாள் இயேசுவை காணச் செய்வார். 70. பாருங்கள், குளிர்ச்சியான சாயங்கால வேளையில் ஈசாக்கு வெளியே நடந்து சென்றார். நான்... சில ஜனங்கள் "அவரைப் பார்ப்பீர்களேயானால், அவர் ஒரு அசலான கருப்பு யூதனாக இருப்பார்" அவர் அவ்விதமாக இருப்பாரானால்... அவர் எவ்விதமாகக் காணப்பட்டாலும் சரி, அவர் என்னுடைய இரட்சகர். மணவாட்டி அவரை பார்க்கும் போது, முதல் பார்வையிலேயே அன்பு கொண்டு விடுவாள். ரெபேக்கா ஈசாக்கைப் பார்த்தபோது, ஒட்டகத்தின் மேலிருந்து கீழே குதித்தாள். அவனை சந்திப்பதற்காக ஓடினாள். முதல் பார்வையிலேயே நேசம் என்பதாக இருந்தது. நான் உங்களுக்கு கூறுகிறேன். நாம் அவரைப் பார்க்கும் போது, முதல் பார்வையிலேயே நேசம் என்பது போல் இருக்கும். தொலைவில் உள்ள அவரிடம் போவோம், இன்னும் தூரம் சென்று அவருடைய கரங்களை அடைவோம். நிச்சயமாக. எவ்வளவு அழகாயிருக்கிறது. மணவாட்டிகளுக்கு , சாயங்கால வெளிச்சம் வருகிறது, ஒரு விசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசம், மூலச்சபைக்கு திருப்புகிறது. ஆதி சபையின் விசுவாசத்தை திரும்ப அளிக்கிறது... அத்திமரம் துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அவள் அசையத் தொடங்கி விட்டாள். சாயங்கால வெளிச்சம்... 71. பெந்தெகொஸ்தே நாளில் பிரசிங்கிக்கப்பட்ட அதே சுவிசேஷம், அதே அடையாளங்களுடன் முப்பது வருடங்களாக பிரசிங்கிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஆதி சபையில் இருந்தவைகள் மறுபடியும் சபைக்குத் திரும்பியுள்ளது, கடைசி வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கும். சகோதரர்களே, இதை உங்களுக்கு கூறட்டும். என்னை ‘பரிசுத்த உருளை’ என்று என்னை அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி நீங்கள் கூறலாம். ஆனால் நான் பின்னால் இருக்கிற ஆதியாகமத்தைப் பார்க்கிறேன், அங்கு தான் அந்த மகத்தான பாரம்பரிய ஆவி தொடங்கிற்று, மார்க்க சம்பந்தமானது போலவே இருந்தது, எவ்வளவு கூடுமோ அவ்வளவான பக்தி வைராக்கியம் காணப்பட்டது. வேதாகமத்தினூடாக முழுவதும், இக்கடைசி காலத்திலும் அது இறங்கி வந்திருப்பதை நான் காண்கிறேன், அதை பரிசுத்த ஆவியானவரும் கவனித்திருக்கிறார். இக்கடைசி நாட்களில் அதை கூர்ந்து கவனியுங்கள். சரியாக இப்பொழுது அது மிகவும் அடிப்படைவாதியாக காணப்படும், தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதின் பெலனை மறுதலிக்கும். “அப்படிப்பட்டவைகளை விட்டு திரும்புங்கள். அதை விட்டு வெளியே வாருங்கள்” என்று அவர் கூறினார். இன்று நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். பரிசுத்த உருளைகளுடன் நான் என்னையும் ஒருவனாக வைத்துள்ளேன். அதன் காரணமாகத்தான் இன்று நான் பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தில்- வல்லமையோடும், அடையாளங்களோடும், அற்புதங்களோடும் கூடிய ஞானஸ்நானத்தில் விசுவாசம் கொண்டுள்ளேன். அல்லேலூயா. அது பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்பு கொடுக்கப்பட்ட விசுவாசம். 72. நீதிமான்கள் மரிப்பது போல நான் மரிக்கட்டும், என்னுடைய கடைசி முடிவு அவர்களுடையதைப் போலவே இருக்கட்டும். காலாகாலமாக இருந்து வரும் மீதமாயிருக்கிற சிறு கூட்ட ஜனங்களை பாருங்கள். பரிசுத்த வேதாகமத்தின் பக்கங்கள் வழியாக காற்று அடிக்கிற திசையைக் கவனியுங்கள், அந்த சிறு சபை, எல்லா காலங்களிலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. மற்றொரு பக்கத்தைக் கவனியுங்கள். அவ்வளவு அருகாமையில் இருந்து கொண்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும், அடிப்படையில் சரியாய் காணப்படும், பரிபூரணமாக, சிறந்த சபைகளாக, வேதாகம கோட்பாடுகளை பின்பற்றுவது போல, அவ்வாறு அழைக்கப்படும். அவர்கள் அதைச் செய்வார்கள். வெளியே புறப்பட்டுச் சென்று, அவர்கள் கூறுவது "ஆம், ஐயா. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விசுவாசிக்கிறோம். அவர் கன்னிப் பிறப்பைக் கொண்ட தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறோம். அவரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவரிடத்தில் நாங்கள் விசுவாசமாயிருக்கிறோம்" என்று. அது நல்லது தான். 73. ஏன் சகோதரனே, விசுவாசத்தினால் நீர் இரட்சிக்கப்பட்டாய். அது சரியா? ஆனால் கவனியுங்கள். உன் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, தேவன் உன் விசுவாசத்தை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உறுதிப்படுத்துகிறார். நீ விசுவாசிக்கிறேன் என்று கூறியும், பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தை பெறவில்லையென்றால், நீ அதை – அதை விசுவாசிக்கவில்லை தேவனுடைய பார்வையில் உன் விசுவாசம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.இருதயத்தில் விசுவாசிப்பதற்கு பதிலாக மூளை அறிவினால் பெற்றுக் கொண்ட விசுவாசமாகும். அது சரி. நீங்கள் உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கும் போது, பரிசுத்தாவியை உன்மேல் ஊற்றுவதற்கு தேவன் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு அவர் உன் மீது பரிசுத்த ஆவியை ஊற்றுவாரேயானால்... நீங்கள் "நல்லது, நானும் கூட பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன்" என்று கூறிக் கொள்ளலாம். நல்லது, நீங்கள் அதைச் செய்தால், இயற்கைக்கு மேம்பட்ட அடையாள, அற்புதங்களை விசுவாசிப்பதற்கு கடமை பட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் அதனுடன் இணைக்கப்பட்டாருக்கிறீர்கள். அதுதான் விசுவாசம் ஆகும். 74. பின்னர் நீங்கள் கூறலாம், "ஓ, இல்லை. தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கவில்லை. நடந்து கொண்டிருக்கிற எல்லாவித மோசடிகளை நான் நம்பவில்லை; சத்தமிடுதலையும், தேவனை துதிப்பதலையும், அழுவதையும், கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுவது போன்ற காரியங்கள் எதையும் நான் நம்புவதில்லை. அந்த அனைத்தையும் நாம் நம்புவதில்லை. அப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் கிடையாது என்பதை நான் அறிந்திருக்கின்றேன்" என்று கூறினால், அது நீ பெற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. அது மிகவும் சரியானது. அது காண்பிக்கிறது... இங்கே அந்த மனிதன் பிலேயாம் இருக்கிறான், அடிப்படைக் கோட்பாட்டை உடையவனைப் போல, மோசேயுனுடையதைப் போல இவனுடைய கோட்பாடும் சரியாக இருந்தது. ஆனால் மோசேயோ, சுகமாக்குதல், மற்றும் அடையாளங்களை உடையவனாயிருந்தான், பெரிய அக்கினி ஸ்தம்பம் அவன் மேல் தொங்கிக் கொண்டிருந்தது; அல்லேலூயா! நீங்கள் அதை புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். நல்லது. அக்கினி ஸ்தம்பம் அவன் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அடையாளங்கள், அதிசயங்கள், அற்புதங்கள் மற்றும் எல்லாமும், தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய மகிமை அங்கு இருந்தது. அது சரியா? மறுபக்கத்தில் உள்ளவர்கள் அடிப்படை கோட்பாடுகளை உடையவர்களாயிருந்தும் அதைப் பெற்றிருக்கவில்லை. அது சரியா? அதுதான் இன்றைக்குரிய காரியமும் கூட; தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாக இருக்கின்றனா்; அத்தகைய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவைகளிலிருந்து திரும்புங்கள். அதையே பரிசுத்த வேதாகமமும் கூறுகிறது. அது சரியென்று விசுவாசிக்கிறீர்களா? நான் என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். இப்போது, கவனியுங்கள். பின்பு அவன், "நீதிமான்கள் மரிப்பது போல நானும் மரிக்கட்டும்..." என்று கூறினான். (ஒரு மாதிரி விமானத்தின் சத்தம் இடையூறு செய்கிறது, ஆகவே சகோதரன் நிறுத்துகிறார்-ஆசி) ஹேய், சாத்தான் என்ன செய்வான் என்று பாருங்கள்? இப்போது நீங்கள் பிசாசைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே கவனியுங்கள்; அங்கிருக்கும் மனிதர்களுக்குள் புகுந்து விட்டான். அவர்கள் செய்கிற கிரிகைகளை பாருங்கள். அப்போது, ஒருவர், "அது பிசாசு என்கிறீர்களா?" என்று கேட்டார். தேவனுடைய ஆவியை இடையூறு செய்கிறது பிசாசேயல்லாமல் வேறு யார் அதைச் செய்வார்கள்? நிச்சயமாக, ஒரு கூட்டம் பிரசிங்கிமார்கள், அதைப் புரட்டிப் போட்டு விட்டார்கள். (மிகவும் சரியாக), கூட்டங்களை நிறுத்த முயற்சி செய்வது, ஆனால், தேவனை உங்களால் நிறுத்த முடியாது. தேவன் எப்போதும் போல மிகச் சரியாக அசைவாடுவார். தேவனுடைய வல்லமையை எதுவும் தடை பண்ண முடியாது. நிச்சயமாக, நிச்சயமாக. அவர்கள் அதே ஜனங்கள் தான், அவர்கள் மனந்திரும்பாவிடில் அவர்கள் என்றென்றும் நரகத்தில் கிடப்பார்கள். உண்மையிலேயே... நீங்கள் கூறுவீர்கள், நீங்கள் நியாந்தீர்க்கிறீர்கள்" என்று. இல்லை, நான் அதைச் செய்யவில்லை. "அவர்களின் கனிகளினால் அவர்களை அறிவீர்கள். அது சரியே. அது மிகவும் சரியே. ஆகவே, அதற்காக... இன்று கவனியுங்கள். நாம் ஒருவிசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராடுகிறோம். பாருங்கள்? இப்போது, செய்தியை பெற்றுக் கொண்டீர்களா? நான் என்ன பொருள் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அதையே நாம் விசுவாசிக்கிறோம். அதன் காரணமாக. 75. தேவனைக் குறித்து ஒன்றுமே தெரியாத அடிப்படைவாதிகளான இங்குள்ள சிலருக்கு, வேத வாக்கியங்களை அறிந்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக ஒன்றும் தெரியாது. அவ்வளவுதான் நீங்கள் பெற்றிருக்கிற அனுபவம் எனில், காலம் தாமதிப்பதற்கு முன்பே இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு நாளில், அங்கேயிருக்கிற வேறு ஒரு தேசத்தில், இந்த சிறிய, பழைய பரிசுத்த உருளை என்று அழைக்கப்படுகிற பிரசங்கி பிரசிங்கிப்பதை நீங்கள் கவனிக்கும்போது, நான் சரி என்பதைக் கண்டு கொள்வீர்கள். நாம் பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்பு கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராடுகிறோம் என்பதை கண்டு கொள்வீர்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இப்பொழுதே அவரிடத்தில் பேசுங்கள். இந்த வேளையில் நாம் தலைகளை தாழ்த்துவோமாக. பரலோக பிதாவே, இன்று நாங்கள் உம்மிடத்தில், உம்முடைய பிரசன்னத்தில் வருகிறோம், வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது, என்பதை உணர்ந்தவர்களாக. நீர் இங்கு இருக்கிறீா், உம்மை உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்பதை அறிந்திருக்கிறோம். தேவனாகிய கர்த்தாவே, தேவனால் அபிஷேகம் பெற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவன் இயந்திரக்கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் போடுவது அவனுக்கு நலமாயிருக்கும்... என்று நீர் உம்முடைய வேதத்தில் கூறியிருக்கிறீா். 76. மேலும் இப்போது, கர்த்தாவே, நீர் சகலத்தையும் அறிவீா். இங்கு உம்மை அறியாதவர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பற்றி அறியாமல் யாராவது இங்கிருப்பார்களானால், இன்றே அவர்கள் பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைக் கண்டு கொள்வார்களாக. வழியில் கர்த்தரோடு கூட, அவருடைய புறக்கணிக்கப்பட்ட ஒருசிலரையும் எடுத்து செல்வார்களாக, "கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்ட பரம அழைப்பிற்காக அந்த காரியங்களையெல்லாம் பின்னாகத் தள்ளிவிட்டு, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்கிறேன்" என்று பவுல் கூறியதை உணர்ந்தவர்களாய் இருப்போமாக. கர்த்தாவே, இன்று அதை அருளிச்செய்யும், உம்முடைய மகிமைக்காக இந்த காரியங்கள் நடந்தேறச் செய்யும். 77. இப்போதும் பிதாவே, இங்கிருக்கிற அனைவரையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன், உம்மிடத்தில் கேட்கிறேன்... என்னுடைய ஜீவியத்தில் மகத்தான காரியம் என்று நான் அறிந்து கொண்டது, ஏதாவது ஒன்றை உம்மிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதே. இப்போது, கர்த்தாவே, அதை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். உம்முடைய ஜனங்களை ஒன்று சேர்ப்பீராக, இதிலிருந்து சத்துருவை அகற்றி போடுவீராக− ஜனங்களின் மத்தியிலிருந்து, தேவனுடைய வல்லமை ஒவ்வொருவருடைய இருதயத்தையும் சென்றடைவதாக, இவைகளை நான் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். சற்று நேரத்திற்கு உங்கள் தலைகளை தாழ்த்தினவர்களாக இருங்கள். "சகோதரன் பிரன்ஹாமே, நான் உண்மையாகவே− நாம் உண்மையாகவே கடைசி நாட்கள் ஜீவிக்கிறோம். கடைசிக் காலத்தில் ஜனங்களில் கிரியை செய்கிற ஆவியை் பார்க்கிறேன். தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, தேவனற்ற ஜனங்களை பார்க்கிறேன். அவர்கள் தாங்கள் சரியென்று எண்ணுகிறார்கள், பிசாசின் கோட்பாடுகளுக்கும், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் செவி கொடுக்கிறார்கள். சகோதரன் பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறேன். நான் ஒருபோதும் மறுபடியும் பிறக்கவில்லை, நான் அடிப்படைக் கொள்கையுடைய சபையைச் சார்ந்தவனாக இருந்தும் கூட, அல்லது அப்படிப்பட்ட வேறே கொள்கையுடைய , ஆனால், மறுபடியும் பிறக்கும் வரை, நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவே நான் இப்போதே இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட வாஞ்சிக்கிறேன்." எத்தனை பேர் இவ்வாறு அறிக்கை செய்வீர்கள் என்று நான் அதிசயிக்கிறேன். உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? ஆகவே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பிசாசின் எல்லாவிதமான குழப்பத்தின் மத்தியிலும் மற்றுமுள்ள காரியங்களின் மத்தியிலும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. வாலிபர்கள், வாலிபப் பெண்கள், அவர்களில் சிலர் உட்கார்ந்து கொண்டு கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கின்றனா். எல்லாவித குழப்பத்தின் மத்தியிலும். அப்படியிருந்தும் அவர்கள் குழப்பம் அடையவில்லை. தேவனுடைய வல்லமை ஜனங்களின் இருதயத்தை அடைந்து அசைவாடிக் கொண்டிருக்கிறார்... அனைத்தும் சரியே. 78. இந்தக் காரியங்களின் மீதுள்ள அதே வகையான ஆவி இங்கிருக்கிற ஜனங்கள் மீதும், அரங்களிலிருக்கிற ஜனங்களையும் பாலிகார்ப்பின் நாட்களிலிருந்து இரத்த சாட்சிகளின் நாட்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அதே ஆவி தான் ஜான் வெஸ்லி தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்த இடத்தில், நரியை அவிழ்த்து விட்டார்கள், இது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதே இடத்தில் தான், இங்கிலாந்து தேசத்தில், லண்டனில் அவருக்கு ஒரு பெரிய சிலை வைத்துள்ளனா். அப்போது பிரசங்கிக்கப்பட்ட அதே சுவிசேஷம், இப்போது பிரசிங்கிக்கப் படுகிறது. அதே பிசாசு இன்றும் ஜீவிக்கிறான்; அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அங்கே கிரியை செய்த அதே ஜனங்கள் இன்று, இந்தக் கட்டிடத்திற்குள் வரக்கூடுமானால் இப்போது அவர்கள் இருந்ததான நரக வேதனையை விட்டு வருவார்களானால் சடுதியாக கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 79. இப்பொழுது, அந்த தேவன் இங்கிருக்கிறார் என்பதையும், நீங்கள் நினைவு கூறப்பட வேண்டும் என்றும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால், காலங்கள் தோறும் புறக்கணிக்கப்பட்டு வந்து, சிறு கூட்ட ஜனங்களோடு எப்போதும், "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நான் போராட விரும்புகிறேன்” என்று கூறுங்கள். சகோதரன் பிரன்ஹாமே, நான் இப்போது எழுந்து நின்று என்னுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறுங்கள். நான் விரும்புகிறேன்... நான் ஒரு சபையைச் சார்ந்திருக்கிறேன், நானோ அல்லது வேறு ஒருவரோ... வேறு சபையைச் சார்ந்திருக்கலாம்... "நீங்கள் அந்த சபையை விட்டு வெளியே வர வேண்டும் என்று கூறவில்லை, அந்த நிலையை விட்டு வெளியே வாருங்கள் என்றே கூறுகிறேன். பின்பு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள், உங்கள் பிரசங்கி சத்தியத்திற்கு திரும்பலாம், உங்கள் முழு சபையும் சத்தியத்திற்குத் திரும்புவதைப் பெற்றிருப்பீர்கள். 80. இப்போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவில்லை என்றால், நீங்கள் காலூன்றி எழுந்து நிற்பீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, எல்லா இடங்களிலும் எழுந்து நிற்கின்றனர். எல்லா இடங்களிலும் உள்ளவர்கள் சற்றே நின்ற வண்ணமாயிருங்கள். "சகோதரன் பிரன்ஹாமே, இரட்சிப்பு எனக்கு தேவையாயிருக்கிறது, அவருடைய விலையேறப் பெற்ற ஆவி என்மீது அமர வேண்டும், அது எனக்குத் தேவையாயிருக்கிறது. சரியான முறையில் இயேசு கிறிஸ்துவோடு இருக்க தீர்மானம் எடுக்கிறேன். அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறேன் என்பதை விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். தீர்மானம் செய்யுங்கள், அவ்வாறு செய்யுங்கள். அநேகர், அநேகர் எழுந்து நிற்கின்றனர். ஒருவர் எழுந்து நின்று, "என்னுடைய வழியை தீர்மானிக்க விரும்புகிறேன்" என்று கூறுங்கள். "சகோதரன் பிரன்ஹாமே..." ஐயா, உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. எல்லா இடங்களிலும் சுற்றிலுமிருக்கிற ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. என்னுடைய இடது பக்கத்திலும், வெளியிலும், மலையடிவாரங்களில் நிற்பவர்களையும், எல்லோரும் "நான் கிறிஸ்துவை என்னுடன் எடுத்துக்கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று கூறுங்கள். அவ்வாறு கூறுகிறவர்கள், உங்கள் கரங்களை உயர்த்து உயர்த்துவீர்களா? "நான் கிறிஸ்துவை என்னுடன் எடுத்துக் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்று கூறுங்கள். என்னுடைய வலது பக்கத்தில் இருப்பவர்கள்; இளம்பெண்ணே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக; பின்னால் நின்றுகொண்டிருப்பதை நான் காண்கிறேன். எனக்கு வலது புறத்தில் மலைப்பகுதியில் இருப்பவர்கள், யாராவது கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? யாராவது எனக்கு பின்னாலே இடது புறத்தில் இருப்பவர்கள், வெளியே மலைப்பகுதியில் இருப்பவர்கள், "நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கே பின்னால் நீங்கள் நிற்பதை காண்கிறேன். மலையில் ஒரு கூட்டம் ஜனங்கள் உள்ளனா். இங்கு யாரோ ஒருவர், சகோதரன் பிரன்ஹாமே "இப்போதே நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இந்த மணி நேரத்தில் ஜெபத்தின் என்னை நினைவு கூறும்படி விரும்புகிறேன்" என்று மற்றவர்களும் கூறுகின்றனா். 81. நம்முடைய ஜெப கூடாரத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர், ஆனால் ஜெபக்கூடாரத்திற்கு உங்களை அழைக்க முடியவில்லை; நாம் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இங்கேயே நின்று, நீங்கள் எங்கே நின்று கொண்டு இருக்கிறீர்களோ அங்கேயே தேவன் நமக்கு பரிசுத்தாவியின் அபிஷேகத்தை தருவார். உங்கள் கால்களில் நின்று "நான் விரும்புகிறேன்− சகோதரன் பிரன்ஹாமே, இப்போதே ஜெபத்தில் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன்"என்று கூறுங்கள். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடுபவர்களுடன் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். கிறிஸ்தவன் என்ற முறையில் நான் ஒரு தீர்மானம் எடுக்க விரும்புகிறேன், தவறானவைகளுக்கு எதிர்த்து நின்றும், சரியானதற்காக உறுதியாய் நிற்கவும் தீர்மானம் எடுக்க விரும்புகிறேன். எல்லாம் சரி. இப்போது, நினைவில் கொள்ளுங்கள், அநேக இடங்களிலிருந்து சிலர், ஒருவேளை பல நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வருவதையும் ஜெப கூடாரத்திற்குள் போகிறார்கள். அவர்களில் அநேகர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர், பாவத்திலிருந்து இரட்சிக்கப் பட்டார்கள், இன்னும் பலவற்றிலிருந்து விடுதலை அடைந்தார்கள். இன்று, அது இங்கிருக்கிறது, ஓ, ஒருவேளை ஒரு நூறு ஜனங்களாயிருக்கலாம். அறுபது அல்லது எழுபது பேர் இரட்சிக்கப்படாதவர்களாக இருக்கலாம், கொஞ்சம் குறைவாக வெவ்வேறு இடங்களில் நின்று கொண்டிருக்கின்றனா். கூறுவேனேயானால்... பின்னால் என்ன இருக்கிறது என்று என்னால் கூற இயலாது; ஒரு கூட்டம் ஜனங்கள் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மிகவும் தூரத்தில் உள்ளனர், சிலர் மலைப்பகுதியிலிருக்கின்றனா். ஆனால், இப்பொழுதே, ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்த ஆவியினால் நிரப்புவதற்கும் இழந்துபோன ஆத்மாக்களை இரட்சிப்பதற்கும், பின்வாங்கி போனவர்களை மறுபடியும் உரிமை கோரவும், இயேசு கிறிஸ்து இங்கேயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 82. இப்போது, நம்முடைய தலைகளைத் தாழ்த்தியிருக்கிற நேரத்தில், நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் தலைகளைத் தாழ்த்தினவர்களாக இருக்கட்டும். நாம் ஜெபிப்போம். ஓ, கர்த்தாவே உம்முடைய இரக்கத்திற்காகவும், நீர் செய்த நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். உம்முடைய பரிசுத்த ஆவிக்காக நன்றி கூறுகிறேன். ஒவ்வொருவா் மேலும் உம்முடைய கிருபை இருக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். கர்த்தாவே இரங்கும், தேவையாயிருக்கிற இவர்கள் மீது கிருபையாயிரும், அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனா். பழையனவைகளை அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் ஜனங்களை விட்டு வெளியே வந்து, இயேசு கிறிஸ்து அவர்களுடைய இரட்சகர் என்று உரிமை பாராட்டுகிறார்கள். அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, பரிசுத்த ஆவியினால் அவர்களை நிரப்பும். அவர்களில் அநேகர் கர்த்தாவே, இந்த சபையை சுற்றிலும் ஜீவிக்கிறார்கள், சுவிசேஷத்திற்குள் போதுமான ஆழத்திற்குள் அவர்கள் செல்லவில்லை, இதுபோன்று கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கிறார்கள். பழைய ஏற்பாட்டில் நடந்த காரியங்கள் இப்போது ஏன் நடக்கவில்லை, புதிய ஏற்பாட்டில் நடந்த கிரியைகள் இப்போது ஏன் நடக்கவில்லை, அவர்கள் சேவித்த தேவனையே நாங்களும் சேவிக்கும் போது அவைகள் ஏன் சம்பவிக்கவில்லை? என்று ஆச்சரியப்படுகிறார்கள். இப்போது, இன்று கர்த்தாவே, இந்தக் காரியங்களில் அவர்கள் தவறாய் வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதை உணர்கிறார்கள். வெவ்வேறு இடங்களிலும், வெளியிலேயும், உள்ளவர்கள் அனைவரும் இங்கு நிற்கின்றனர், இப்போது நீர் அவர்களை பரிசுத்த ஆவினால் நிரப்புவீர் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். தேவனே, என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு சிந்தையோடும் நான் வேண்டிக்கொள்கிறேன், ஒவ்வொருவரையும் நீர் பரிசுத்த ஆவியினால் நிரப்புவீராக. ஒவ்வொருவருடைய பாவமும் மன்னிக்கப்படுவதாக, அவர்களின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரே முதன்மை ஸ்தானம் வகிப்பாராக. இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். 83. இப்போது, நாம் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில், மீதமுள்ளவர்களும் இப்பக்கமாக எழுந்து நில்லுங்கள். நான் அதை விரும்புகிறேன். அங்கேயே எழுந்து நில்லுங்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விசுவாசியும். இந்த நேரத்தில் பரலோக பிதா இங்கு கூடியிருப்பவர்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியும், அது பிரமிக்கத் தக்கதாய் இருக்கிறது. சகலமும் கைகூடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். தேவனிடத்திலே விசுவாசமாய் மட்டும் இருங்கள். அதை உங்களுக்கு தேவன் அருளிச் செய்வார் என்று விசுவாசிக்கிறேன். நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கவில்லையா? வெளியிலே மலைகளில் இருக்கிறவர்கள், மற்றும் உள்ளோரையும், தேவன் நீங்கள் கைகளை உயர்த்தும் போதே கண்டுள்ளார். எத்தனை பேர் கிறிஸ்துவை இப்போது ஏற்றுக்கொள்கிறீர்கள்... (ஒலிநாடாவில் காலியிடம் − ஆசி). எல்லாமும் உங்களுக்கு போதுமானதாக இருக்கிறது... (ஒலிநாடாவில் காலியிடம் − ஆசி.) உம்முடைய ஆசீர்வாதத்தின் ஐசுவரியம் இந்த ஜனங்கள் மீது அமர்வதாக, பரிசுத்த ஆவியின் நிறைவை இந்நாளில் பெற்றுக் கொண்டவர்களாக திரும்பிச் செல்லட்டும். இதற்குப் பிறகு அவர்கள் உம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக ஜீவிக்கட்டும். அவர்கள் பரிசுத்த வான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராட வேண்டும் என்பதை மறந்து போகாது இருப்பார்களாக. தேவனே, ஆவியானவர் தாம் சரியாக ஒவ்வொருவா் இருதயத்திலும் பிரவேசிப்பீராக என்று நாங்கள் ஜெபிக்கிறோம். பலத்த காற்றடிக்கிற முழக்கம் போல கட்டிடம் முழுவதையும் நிரப்புவீராக. கர்த்தாவே, இப்போது அவரை அனுப்பும் நீர் ஜெயம் பெற வேண்டும் என்று நான் விண்ணப்பம் செய்கிறேன். நீர்... நாம்... "நாங்கள் ஒரு பிரதான ஆசாரியனாக இருக்கிறோம். ஆவிக்குரிய பலிகளை செலுத்துகிறோம்; உதடுகளின் கனிகளினால் தேவனை துதிக்கிறோம்." மேலும், ஒவ்வொரு விசுவாசியும் பிரதான ஆசாரியனுக்கு உகந்த பலியாக, ஆர்ப்பரித்து தேவனை மகிமைப்படுத்தி, அவரை ஸ்தோத்தரித்து, தேவனுடைய புகழ்ச்சிக்குள் செல்வார்களாக இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். ஜனங்கள் தங்கள் முழு இருதயத்தோடும் தேவனுக்கு மகிமையைச் செலுத்தித் துதிக்கின்றனர்.ஆமென்.